வாகனம் மோதி 82 வயது முதியவர் மரணம்; ஓட்டுநருக்குச் சிறை

வாகனம் மோதி 82 வயது முதியவர் மரணம்; ஓட்டுநருக்குச் சிறை

1 mins read
55b7d9b0-59f1-445c-b668-5e7aa7c9efc2
-

முதி­ய­வர் ஒரு­வர் சாலை­யைக் கடப்­ப­தைக் கவ­னிக்­காத பகு­தி­நேர 'கிராப்' ஓட்­டு­நர் குவா சொன் இங், 67, அவர் மீது மோதி­னார். 82 வய­து­டைய அந்த முதி­ய­வர் பலத்த காயங்­கள் ஏற்­பட்டு பின்­னர் உயிர் இ­ழந்­தார்.

குவா­வுக்கு நேற்று ஒன்­பது வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அத்­து­டன் அனைத்து வகை வாக­னங்­க­ளை­யும் ஓட்­டு­வ­தற்­கான உரி­மத்­தை­யும் அவர் வைத்­தி­ருக்­கவோ பெறவோ எட்டு ஆண்டு­கள் தடை விதிக்­கப்­பட்­டது.

வாக­னங்­கள் வரு­வ­தைக் கவ­னிக்­கத் தவ­றிய திரு லீ ஹோய் போங், சாலை­யைக் கடந்­த­தா­க­வும் கவ­னக்­கு­றை­வு­டன் வாக­னத்தை ஓட்­டிச் சென்ற குவா அவ­ரைக் கவ­னிக்­கா­மல் மோதி­ய­தா­க­வும் கூறப்­பட்­டது.

மருத்­து­வ­ம­னைக்­குச் செல்­லும் வழி­யி­லேயே முதி­ய­வர் மார­டைப்­பால் மாண்­டார்.