செயற்கைப் பல் பொருத்துதல்: மருத்துவருக்குத் தண்டனை

செயற்கைப் பல் பொருத்துதல்: மருத்துவருக்குத் தண்டனை

1 mins read
cc29f0ee-64cc-4b58-89fc-e5571c4e5c14
-

செயற்­கைப் பல் பொருத்­து­வ­தற்­காக தன்னை நாடி வந்த நோயா­ளிக்­குப் பிற்­கா­லத்­தில் பிரச்­சினை ஏற்­ப­டக்­கூ­டும் என்று அறிந்­தி­ருந்­தும் பல் மருத்­து­வ­ரான டாக்­டர் ஒலி­வர் ஹென்­னெ­டிக் சிறு செயற்­கைப் பற்­க­ளைப் பொருத்த முயன்­றார். செயற்­கைப் பல் பொருத்­தும் முன் அந்­தப் பகு­தி­யைச் சுற்றி தாங்­கிப் பிடிப்­ப­தற்­குப் போது­மான எலும்பு தேவைப்­படும்.

இருப்­பி­னும் சரி­யா­கச் சோதிக்­கா­மல் டாக்­டர் ஹென்­னெ­டிக் செயற்­கைப் பல் பொருத்­தி­ய­தா­க­வும் அதன் பின்­னர் நோயா­ளிக்­குப் பல பிரச்­சி­னை­கள் ஏற்­பட்­டன. பல் மருத்­து­வர் பணி­யி­லி­ருந்து 15 மாத இடை­நீக்­கம் செய்­யப்­பட்­ட­து­டன் $15,000 அப­ரா­த­மும் டாக்­டர் ஹென்­னெ­டிக்கு விதிக்­கப்­பட்­டுள்­ளன.

செயற்­கைப் பல் பொருத்­து­வது தொடர்­பான அடிப்­படை வகுப்­புக்­கும் அவர் செல்ல வேண்­டும்.