அனைத்துலக நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உதவும் புதிய திட்டம்

அனைத்துலக நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உதவும் புதிய திட்டம்

2 mins read
c285919a-fa1f-4959-b336-69c6f17688c8
புதிய முதலீட்டுக் கட்டமைப்புத் திட்டத்தின்வழி நிறுவன பங்காளிகளுடன்ஒன்-நார்த் பகுதியில் அமைந்துள்ள புதிய தொழில் நிறுவனங்கள்இணைந்து செயல்பட முடியும். படம்: ஜேடிசி -

புதி­தாக சிங்­கப்­பூ­ரில் தொழில் தொடங்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு கூடு­தல் ஆத­ரவு கிடைக்­கும் வகை­யில் புதிய திட்­டம் ஒன்று தொடங்­கப்­பட்­டுள்­ளது.

திட்­டத்­தின்­கீழ் ஒத்­து­ழைப்பு மற்­றும் முத­லீட்டு வாய்ப்­பு­க­ளுக்­காக அனைத்­து­லக நிறு­வ­னங்­க­ளு­டன் இந்­தப் புதிய நிறு­வ­னங்­கள் இணைந்து செயல்­பட முடி­யும். 700க்கும் மேற்­பட்ட புதிய தொழில் நிறு­வ­னங்­கள் இத்திட்­டத்­தின் வழி பல­ன­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

தொழில்­துறை மேம்­பாட்டு நிறு­வ­ன­மான ஜூரோங் நக­ராண்­மைக் கழ­கம் (ஜேடிசி), புதிய முத­லீட்­டுக் கட்­ட­மைப்­புத் திட்­டத்தை நேற்று தொடங்­கி­வைத்­தது.

நிறு­வன பங்­கா­ளி­க­ளு­டன் ஒன்-நார்த், ஜூரோங் புத்­தாக்க வட்­டாரம் ஆகிய இடங்­களில் அமைந்­துள்ள புதிய தொழில் நிறு­வ­னங்­கள் இணைந்து செயல்­ப­டு­வ­தற்­குப் புதிய திட்­டம் கைகொ­டுக்­கும்.

இந்த நிறு­வன பங்­கா­ளி­க­ளின் வட்­டார, அனைத்­து­ல­கக் கட்­ட­மைப்­பு­க­ளின் வழி புதிய தொழில் நிறு­வனங்­கள் விரி­வ­டை­வ­தற்கு திட்­டம் ஏது­வாக இருக்­கும். நிதி ஆத­ரவு வாய்ப்­பு­கள், கூட்டு ஆராய்ச்சி, மேம்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் போன்­ற­வற்­றுக்­கும் திட்­டம் உத­வும்.

கட்­ட­மைப்­பின் முன்­னோடி உறுப்­பி­னர்­க­ளாக இது­வரை எட்டு நிறு­வன பங்­கா­ளி­கள் இணைந்­துள்­ளன. இந்த எட்டு நிறு­வ­னங்­கள் கடந்த மூன்று ஆண்­டு­களில் ஒட்டு­மொத்­த­மாக $23 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலரை (S$31.5 மி.) முத­லீடு செய்­துள்­ளன. சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த புதிய தொழில் நிறு­வ­னங்­கள் புதிய தீர்வு­களைக் கண்­டு­பி­டிக்க வேண்­டும் என்­ப­தற்­காக அந்த முத­லீடு பயன்­படுத்­தப்­பட்­டது.

நிறு­வன பங்­கா­ளி­களும் புதிய தொழில் நிறு­வ­னங்­களும் இணைந்து செயல்­ப­டு­வ­தற்கு அதிக வளர்ச்சி காணக்­கூ­டிய வேளாண் உணவு, நிதித் தொழில்­நுட்­பம், தள­வா­டங்­கள், நக­ரப் போக்­கு­வ­ரத்து, நீடித்த நிலைத்­தன்மை துறை­கள், முக்­கிய ஒத்­து­ழைப்பு அம்­சங்­க­ளாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன.