சாதாரண கணக்குக்கான மத்திய சேமநிதி வட்டி விகிதம் தொடர்ந்து மூன்றாம் காலாண்டிலும் ஆண்டுக்கு 2.5 விழுக்காடாக இருக்கும். வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கடன்களுக்கான சலுகை வட்டி விகிதமும் ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை ஆண்டுக்கு அதே 2.6 விழுக்காடாக இருக்கும் என்று கழகமும் மத்திய சேமநிதியும் நேற்று கூட்டாக அறிவித்தன.
மத்திய சேமநிதி உறுப்பினர்கள் 55 வயதுக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், அவர்களின் சாதாரண கணக்கில் ஆண்டுக்கு 3.5 விழுக்காடு வரையிலும் அவர்களின் சிறப்பு மற்றும் மெடிசேவ் கணக்குகளில் ஆண்டுக்கு 5 விழுக்காடு வரையிலும் தொடர்ந்து ஈட்டுவர்.
இந்நிலையில் 55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரின் கணக்குகளிலுள்ள ஒட்டுமொத்த தொகையின் முதல் $30,000ன் அடிப்படையில் அரசாங்கம் கூடுதலாக 2% வட்டி வழங்கும்.
அடுத்த $30,000 மீது மேலும் 1% வட்டி கிடைக்கும்.
முன்னர் அறிவித்தபடி ஓய்வுக்கால கணக்குக்கு உரிய 4% வட்டி விகிதத்தில் ஆண்டிறுதிவரை மாற்றம் இருக்காது.

