இனவெறியைக் குறைக்கலாம்

இனவெறியைக் குறைக்கலாம்

2 mins read
47cd27bb-6fde-46cb-8671-df6e8143f293
-

வேலையிடங்களில் மனிதவள நடைமுறைகளை முறைப்படுத்துதல்

இன­வெறி மற்­றும் பார­பட்­ச­மான பணி­ய­மர்த்­தல் நடை­மு­றை­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய மக்­க­ளின் இனம் சார்ந்த கவ­லை­களை சரி­செய்ய நிறு­வ­னங்­கள் மனி­த­வள செயல்­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும்.

மேலும் இனப் பாகு­பாட்டு விவ­கா­ரங்­கள் போன்­ற­வற்­றைத் தயங்­கா­மல் ஊழி­யர்­கள் தெரி­விக்க அவர்­க­ளுக்கு ஒரு பாது­காப்­பான சூழ்­நிலை உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்று 'டஃபெப்' எனப்­படும் நடு­நி­லை­யான வேலை­வாய்ப்பு நடை­மு­றை­கள் தொடர்பான முத்­த­ரப்புக் கூட்­டணி அமைப்­பின் பொது மேலா­ளர் ஃபேத் லி தெரி­வித்­தார்.

உள்­ளூர் ஹோட்­டல் ஒன்­றில் நேற்று நடை­பெற்ற வேலை­யி­டத்­தில் ஒற்­று­மை­யைக் கட்­டிக்­காப்­போம் எனும் மாநாட்­டில் பேசி­ய­போது திரு­வாட்டி லி அவ்­வாறு குறிப்­பிட்­டார்.

இந்த மாநாட்­டுக்கு, இன நல்­லி­ணக்­கத்தை மேம்­ப­டுத்த அமைக் கப்­பட்ட தேசிய அமைப்­பான 'ஒன்­பீப்­பள் எஸ்ஜி'யும் கொள்கை ஆய்­வுக் கழ­க­மும் கூட்­டாக ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.

சம­யத் தலை­வர்­கள், அர­சாங்க அதி­கா­ரி­கள், கல்­வி­யா­ளர்­கள், பெரிய ­நி­று­வ­னங்கள் மற்­றும் அரசு சார்­பற்ற அமைப்­பு­க­ளின் பிர­தி­நிதி­கள் என சுமார் 250 பேர் இந்­நி­கழ்­வில் பங்­கேற்­ற­னர்.

நிகழ்ச்­சி­யில் தொடக்க உரை­யாற்­றிய மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன், "வேலை­யி­டங்­களில் இன­வெ­றிச் செயல்­களைத் துடை­த்தொ­ழிக்க இன்­னும் அதி­கம் செய்­ய­லாம். வேலை­யி­டத்­தில் பாகு­பாடு காட்­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்க, கொள்­கை­களில் மாற்­றங்­களைக் கொண்டு வர அர­சாங்­கம் முயற்சி எடுத்து வரு­கிறது," என்­றார்.

ஆனால், சட்ட நட­வ­டிக்­கை­யால் மட்­டும் இந்­தப் பிரச்­சி­னை­யைச் சமா­ளிக்க முடி­யாது என்று குறிப்­பிட்ட அமைச்­சர், "உண்­மை­யில் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கும் கலா­சா­ரத்­தைத் தவிர்க்க விரும்­பு­கிறோம். வேலை­யி­டத்­தில் அனை­வ­ரும் பார­பட்­ச­மின்றி நடத்­தப்­ப­டு­வ­தையே விரும்­பு­கி­றோம். அதே நேரத்­தில் எந்த வகை­யி­லும் பாகு­பாடு சகித்துக்­கொள்­ளப்­ப­டாது என்­ பதை உறுதி செய்ய வேண்­டும்.

"எனவே, முத்­த­ரப்­புப் பங்­கா­ளி­கள், சரி­யான மன­நிலை மற்­றும் நடை­மு­றை­களை வடி­வ­மைக்க முத­லா­ளி­களை ஈடு­ப­டுத்­து­வ­தற்கு தொடர்ந்து முன்­னு­ரிமை அளிப்­பார்­கள். மேலும் முடிந்­த­வரை பஞ்­சா­யத்து மூலம் புகா­ர­ளிக்­கப்­பட்ட வழக்­கு­க­ளைத் தீர்க்க முயல்­வார்­கள்," என்­றார்.

மலாய்க்­கா­ரர்­கள், இந்­தி­யர்­கள் உட்­பட சிறு­பான்மை இனத்­த­வர்­களில் மூன்­றில் ஒரு பகு­தி­யி­னர் வேலை­யிடப் பாகு­பாட்­டால் தாங்­கள் பாதிக்­கப்­ப­டு­வதை உணர்ந்­துள்­ள­னர் என்று 2013, 2019ஆம் ஆண்­டுக்­கான கொள்கை ஆய்­வுக் கழக ஆய்­வு­கள் காட்­டு­வ­தாக, கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் முதன்மை ஆய்­வா­ளர் மேத்யூ மேத்­யூஸ் கூறி­னார்.

இந்த உணர்­வு­கள் பணி­ய­மர்த்­தல், பதவி உயர்வு ஆகிய பகு­தி­களுக்­கும் நீட்­டிக்­கப்­ப­டு­கின்­றன.

பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­கள் சகிப்­புத்­தன்மை மற்­றும் பன்­மு­கக் கலா­சா­ரத்தை முக்­கி­ய­மான பண்பு­நெறி­களா­கக் கரு­தி­னா­லும், 10 விழுக்­காட்­டுக்­கும் குறை­வான சிறு­பான்­மை­யி­னர், மருத்­து­வ­ம­னை­கள், பள்­ளி­கள் போன்ற பொது இடங்­களில் தங்களுக்கு மோச­மான சேவை வழங்கப்படுவதை உணர்­கி­றார்­கள்.

இருப்­பி­னும், வேலை­யி­டத்­தில் இனப் பாகு­பாடு ஒரு பிரச்­சி­னை­யா­கவே நீடித்து வரு­கிறது என்று டாக்­டர் மேத்­யூஸ் கூறி­னார்.