சிங்கப்பூர்-மலேசியா இணைப்புப் பாலத்தில் போக்குவரத்து நெரிசல்

சிங்கப்பூர்-மலேசியா இணைப்புப் பாலத்தில் போக்குவரத்து நெரிசல்

1 mins read
3512789a-1730-4df2-bb53-0edb42352bce
படங்கள்: டேனி டான்/பேஸ்புக் -
multi-img1 of 2

சிங்கப்பூர்-மலேசியா இணைப்புப் பாலத்தில் நேற்று மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிங்கப்பூரில் ஜூன் மாத பள்ளி விடுமுறை தொடங்கியதை முன்னிட்டு, அதிக அளவில் சிங்கப்பூரர்கள் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்வதால, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சமூகத் தளங்ளில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்களும், காணொளிகளும் இருவழிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் சிக்கிக்கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. சிங்கப்பூரை நோக்கி கனரக வாகனங்களும், மலேசியாவுக்குச் செல்ல கார்களும் வரிசையில் இருப்பது படங்களில் தெரிகிறது.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தரைவழி எல்லைகள் ஏப்ரல் ஒன்றாம் தேதி திறக்கப்பட்ட முதல், இருவழிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.