பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு வீவக உதவி

பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு வீவக உதவி

2 mins read
c72c99af-e371-4470-b5ec-c99f32e2d39c
சிங்கப்பூர், தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு நேரடி அனுபவப் பயிற்சிக்கு வகைசெய்யும் உடன்படிக்கைகளில் வீவக கையெழுத்திட்டுள்ளது. படம்: 'சிஎம்ஜி' -

பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­களில் திட்­ட­மி­டல், மேலாண்மை போன்ற பாடங்­க­ளைப் பயி­லும் மாண­வர்­கள் அவற்­றில் நேரடி அனு­ப­வம் பெற வாய்ப்­ப­ளிக்­கும் வகை­யில் வீடமைப்பு வளர்ச்­சிக் கழ­கம் இரண்டு ஒப்­பந்­தங்­களில் கையெழுத்­திட்­டுள்­ளது.

நலத்­திட்­டங்­களை வடி­வ­மைக்­க­வும் நடை­மு­றைப்­ப­டுத்­த­வும் குடி­யி­ருப்­பா­ளர்­கள், மூத்த குடி­மக்­கள் ஆகி­யோ­ரின் திறன்­க­ளைப் பயன்­படுத்­திக்­கொள்­ளும் முறை­களை மாண­வர்­கள் கற்­றுக்­கொள்ள இந்த உடன்­ப­டிக்­கை­கள் வாய்ப்­ப­ளிக்­கும் என்று தேசிய வளர்ச்­சி இரண்­டாம் அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா குறிப்பிட்டார்.

தோ பாயோ­வில் உள்ள வீவக மையத்­தில் நேற்று அவ­ரது முன்னி­லை­யில் உடன்­பா­டு­கள் கையெழுத்­தா­யின.

இவற்­றில் ஒன்று, சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யு­டன் புதி­தா­கச் செய்­து­கொள்­ளப்­பட்­டது. நிகழ்ச்சி ஒருங்­கி­ணைப்பு, திட்ட மேலாண்­மைத் துறை­யில் பட்­ட­யக் கல்வி வழங்க இது உத­வும்.

தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் முதுமை தொடர்­பான சமூக அறி­வி­யல் துறைப் பட்­ட­யக் கல்­வியை வழங்க வகை­செய்­யும் மற்­றோர் உடன்­ப­டிக்கை நேற்று புதுப்­பிக்­கப்­பட்­டது.

சமூ­கத்­து­ட­னான இரு­வ­ழித் தொடர்பு குறித்த மாண­வர்­க­ளின் புரி­தலை மேம்­ப­டுத்த வீவக உரை நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யும் என்று கூறப்­பட்­டது. மாண­வர்­க­ளின் முயற்­சி­க­ளைப் பாராட்டி புத்­த­கப் பரி­சு­களும் வழங்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றன.

தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யு­டன் முன்­னர் செய்­து­கொள்­ளப்­பட்ட உடன்­பாட்­டின்­கீழ், கடந்த மூன்று ஆண்­டு­களில் 500க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் 6,300க்கும் அதி­க­மான மூத்த குடி­மக்­களை ஈடு­ப­டுத்­தும் நிகழ்ச்­சி­களை நடத்­தி­ய­தாக அமைச்­சர் இந்­தி­ராணி குறிப்­பிட்­டார்.

கூட்டு உடற்­ப­யிற்சி, இசை நிகழ்ச்சி, கலை, கைவி­னைப் பொருள் பயி­ல­ரங்கு போன்­றவை இவற்­றில் அடங்­கும்.

சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யு­ட­னான புதிய உடன்­படிக்கை­யின்­கீழ் ஆண்­டு­தோ­றும் ஏறக்­கு­றைய 100 மாண­வர்­கள் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­து­டன் இணைந்து சமூ­கப் பிணைப்பை வலுப்­ப­டுத்­தும் நிகழ்ச்­சி­களை ஏற்­பாடு செய்து நடத்­து­வர் என்று நிகழ்ச்சியில் நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.