பக்கத்து வீட்டில் தீப்பிடித்தால் செய்ய வேண்டியவை

பக்கத்து வீட்டில் தீப்பிடித்தால் செய்ய வேண்டியவை

1 mins read
ea2129fa-cfdd-4007-837b-79ad1bcbc72b
-

பக்­கத்து வீட்­டில் எதிர்­பா­ரா­வி­த­மாக தீப்­பி­டித்­தால் செய்ய வேண்­டி­யவை பற்றி தீப் பாது­காப்பு நிபு­ணர்­கள் எடுத்­து­ரைத்­துள்­ள­னர்.

முத­லா­வ­தாக "தீ" என்று உரக்­கக் கத்தி யாரா­வது சிங்­கப்­பூர்க் குடி­மைத் தற்­காப்­புப் படையை அழை­யுங்­கள் என்று உதவி கோர வேண்­டும். தீ சிறிய அள­வில் இருந்­தால் சொந்­தப் பாது­காப்­புக்கு பங்­கம் நேராத வகை­யில் அந்த வீட்­டில் உள்­ள­வர்­கள் வெளி­யேற உத­வ­லாம்.

உட­ன­டி­யாக கட்­ட­டத்தை விட்டு வெளி­யேற முடி­யா­விட்­டால் வீட்­டில் உள்ள அனை­வ­ரும் ஓர் அறைக்­குச் சென்று கதவை மூடி புகை வரா­மல் ஈரத் துண்­டைக் கொண்டு அடைத்­து­விட்டு குடி­மைத் தற்­காப்­புப் படையை அழைக்­க­லாம்.

சென்ற வாரம் பிடோக் நார்த் தீச் சம்­ப­வத்­தில் உத­விய சிறு­வ­னின் துணிச்­சல் பாராட்­டுக்கு உரி­யது என்­றா­லும் காலணி அணி­யா­மல் சென்­றது அவ­னது பாது­காப்­புக்கு உகந்­த­தல்ல என்­பதை நிபு­ணர்­கள் சுட்­டி­னர்.