குறைந்துவரும் கொவிட்-19 தொற்று விகிதம்

குறைந்துவரும் கொவிட்-19 தொற்று விகிதம்

1 mins read
6c97d7a1-74ba-4477-8b30-5d04357aebc6
-

சிங்கப்பூரில் வார அடிப்படையிலான கொவிட்-19 கிருமிப்பரவல் விகிதம் மூன்று வாரங்களில் முதல்முறையாக 1க்குக் கீழ் குறைந்துள்ளது.

சென்ற வாரம் பதிவான சமூக அளவிலான கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையை அதற்கு முந்தைய வாரம் பதிவான எண்ணிக்கையுடன் ஒப்பிடுவதே வார அடைப்படையிலான கிருமிப்பரவல் விகிதம். நேற்று அந்த விகிதம் 0.98ஆகப் பதிவானது.

இதற்கு முன்னர் இம்மாதம் 7ஆம் தேதி இவ்விகிதம் 0.96ஆகப் பதிவாகியிருந்தது. 1க்குக் குறைவாக இந்த விகிதம் பதிவாகியிருப்பது உள்ளூரில் கொவிட்-19 கிருமிப்பரவல் குறைவதைக் குறிக்கிறது.

சிங்கப்பூரில் நேற்றுப் புதிதாக கொவிட்-19 கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டோர் எண்ணிக்கை 2,448 என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கிருமித்தொற்றுக்காக 334 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கொவிட்-19 நோய்த்தொற்றால் நேற்று சிங்கப்பூரில் யாரும் உயிரிழக்கவில்லை.