நாளைய உல­கைச் செதுக்­கும் இளை­யர்­கள்

ஹர்­ஷிதா பாலாஜி

சமு­தாய சிக்­கல்­க­ளை­யும் சுகா­தா­ரப் பிரச்­சி­னை­க­ளை­யும் தீர்ப்­ப­தற்­குப் புத்­தாக்க படைப்­பு­களை உரு­வாக்க மேப்­பல்­டிரீ சவால் போட்டி நடத்­தப்­பட்­டது. போட்­டி­யில் கலந்­து­கொண்ட 120 சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப கல்­விக் கழக மாண­வர்­களில் 11 மாண­வர்­கள் இரு குழுக்­க­ளாக இறு­திச் சுற்­றில் பங்­கேற்று முதல் பரி­சைத் தட்­டிச் சென்­ற­னர்.

சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கல்விக் கழ­க­மும் மேப்­பல்­டிரீ முத­லீட்டு நிறு­வ­ன­மும் இணைந்து ஏற்­பாடு செய்த இப்­போட்­டி­யில் முதல் பரிசை தட்­டிச்­சென்ற இரு குழுக்­க­ளுக்­கும் 5000 வெள்­ளி­யு­டன் வெற்­றிக் கோப்பை வழங்­கப்­பட்­டது. வெற்­றி­பெற்ற குழுக்­களில் ஒன்று 'டீம் ராட்­னோ­வே­ஷன்'. இயந்­தி­ரப் பொறி­யி­யல் துறை­யில் படிக்­கும் ஆறு இரண்­டாம் ஆண்டு மாண­வர்­க­ளைக் கொண்ட இக்­கு­ழு­வின் தொழில்­நு­ணுக்க ஆலோ­ச­கர் 25 வயது ராம­சாமி சுப்­பி­ர­ம­ணி­யம் ஆவார்.

"எத்­த­கைய சமு­தாய பிரச்­சி­னை­யைத் தீர்க்­க­லாம் என்று நாங்­கள் சிந்­தித்­துக்­கொண்­டி­ருந்­தோம். அப்­போது கை எலும்பு முறிந்­த­தால் வாரத்­தில் நான்கு ஐந்து நாட்­க­ளுக்கு மறு­வாழ்வு நிலை­யத்­துக்கு எங்­கள் நண்­பர் சென்­று­கொண்­டி­ருந்­தார் என்­பதை அறிந்­தோம். இந்­தச் சிக்­க­லையே கையா­ள­லாம் என்று முடி­வெ­டுத்­தோம்," என்­றார் ராம­சாமி.

ஆகை­யால், மூப்­ப­டை­யும் மக்­கள்­தொ­கையை கருத்­தில்­கொண்டு மறு­வாழ்வு நிலை­யங்­களில் வழங்­கப்­படும் சேவை­களை வசதி குறைந்­த­வர்­க­ளுக்­கும் முதி­ய­வர்­க­ளுக்­கும் வீட்­டி­லேயே வழங்­க­லாம் என்ற யோசனை குழு­வி­ன­ருக்­குத் தோன்­றி­யது.

உடற்­கு­றை­யால் பாதிக்­கப்­

ப­டு­வோர் வீட்­டி­லி­ருந்­த­ப­டியே தேவை­யான உடற்­ப­யிற்­சி­க­ளை செய்­யக்­கூ­டிய சாத­னத்­தைக் குழு உரு­வாக்­கி­யது. எங்கு சென்­றா­லும் தங்­க­ளு­டன் கொண்டு செல்­லும் இந்­தச் சாத­னத்­தின் உத­வி­யோடு உட­லின் மேற்­ப­கு­தித் தசை­கள் தொடர்­பான உடற்­ப­யிற்­சி­க­ளைச் செய்­ய­லாம். ஆயி­னும், இந்த சாத­னத்தை உரு­வாக்­கி­ய­து­டன் இறு­திச் சுற்­றில் அதை நடு­வர்­க­ளி­டம் குழு­வி­னர் விற்க முய­ல­வும் வேண்­டும்.

"சிறப்­புத் தேவை­கள், மருத்­து­வம் தொடர்­பான பல திட்­டங்­களில் ஈடு­பட்ட அனு­ப­வம் எங்­க­ளுக்கு இருந்­த­போ­தும் விற்­பனை செய்­வது பற்­றி­யும் வணி­கத்­துறை பற்­றி­யும் அதி­கம் தெரி­யாது. இத­னால் எங்­கள் சாத­னத்தை எப்­படி விற்­க­லாம் என்ற குழப்­பத்­தி­

லி­ருந்­தோம். இருப்­பி­னும், எங்­கள் குழு­வின் வழி­காட்டி திரு டோவின் அறி­வு­ரை­யைப் பின்­பற்றி முதல் பரிசை வென்­றோம்," என்­றார் ராம­சாமி.

இந்த சாத­னத்தை மேம்­ப­டுத்தி உட­லி­லுள்ள மற்ற தசை­க­ளைச் சரி­செய்­யக்­கூ­டிய வச­தி­யைக் கொண்­டு­வ­ர­வும் சுல­ப­மான பயன்­பாட்­டுக்­காக சாத­னத்­து­டன் ஒரு செய­லியை உரு­வாக்­க­வும் இக்­குழு திட்­ட­மிட்­டுள்­ளது.

அனை­வ­ரும் இந்த சாத­னத்­தைக் குறைந்த விலை­யில் வாங்கி பயன்­ப­டுத்­த­வேண்­டும் என்­பதே இந்த இளை­யர் குழு­வின் நோக்­க­மா­கும்.

புத்­தாக்க படைப்­பா­ளி­க­ளாக

தொழில்­நுட்­பக் கழக மாண­வர்­கள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!