தீர்வு காணும் ஆய்­வா­ள­ராக அனுப்­பி­ரியா

தீர்வு காணும் ஆய்­வா­ள­ராக அனுப்­பி­ரியா

2 mins read
30f4c4db-1dbc-47d7-a80a-b94003152bd6
நியூ­யார்க்­கில் முனை­வர் பட்­டக் கல்வி பயின்று வரும் அனுப்­பி­ரியா ராம­மூர்த்தி. படம்: அனுப்­பி­ரியா -

யுகேஷ் கண்­ணன்

மூப்­ப­டை­த­லுக்­கும் மக்­க­ளின் உயி­ரைப்­ப­றிக்­கும் கொடூர நோய்­க­ளுக்­கும் தீர்வு காண்­ப­தற்­காக உயிர் அறி­வி­யல் துறை­யைத் தேர்ந்­தெ­டுத்­துப் படித்­த­தாக அனுப்­பி­ரியா ராம­மூர்த்தி, 23, கூறி­னார்.

இம்­மா­தம் 13ஆம் தேதி யேல்-சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பட்­டம் பெற்ற 242 மாண­வர்­களில் இவ­ரும் ஒரு­வர்.யேல்-சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக கல்­வித் திட்­டத்­தில் பயின்றதன் மூலம், தனது விருப்­பத்தை நிறை­வேற்­றத் தேவை­யான ஆத­ர­வும் வச­தி­களும் வழங்­கப்­படும் என இவர் நம்­பு­கி­றார். தன் கல்வி அனு­ப­வமே, தன்னை ஒரு விஞ்­ஞா­னி­யா­க­வும் ஒரு மனி­த­ரா­க­வும் செதுக்­கி­ய­தா­கக் கூறுகிறார் அனுப்­பி­ரியா.

தனது முத­லாம் ஆண்­டில் நிக்­கோ­லஸ் டௌலின்ஸ்கி என்ற இணைப் பேரா­சி­ரி­ய­ரின் ஆய்­வுக்­கூ­டத்­தில் ஆராய்ச்­சி­யைத் தொடங்­கிய இவர், தனது பட்­டக்­கல்வி முடி­யும் வரை அங்­கேயே அவ­ரது ஆராய்ச்­சி­யைத் தொடர்ந்­தார்.

அவர் அங்கு பெற்ற ஆய்­வுத் திறனும் பேரா­சி­ரி­யர்­கள் கொடுத்த வழி­காட்­டு­த­லும் தனது மேற்­ப­டிப்­பி­லும் வாழ்க்கை லட்­சி­யங்­களை அடை­வ­தி­லும் பெரி­தும் உத­வு­மென நம்­பு­கி­றார்.

இத­னால், ஒருவர் தமது வாழ்­விலும் அடுத்த பய­ணங்­களில் அவரால் தன்­னம்­பிக்­கை­யு­ட­னும் துணிச்­ச­லு­ட­னும் செயல்­பட இய­லும் என இவர் எண்­ணு­கி­றார்.

அனுப்­பி­ரியா தற்­போது நியூ யார்க் நக­ரில், சினாய் மலை­யி­லுள்ள இக்­காஹ்ன் மருத்­து­வக் கல்­லூ­ரி­யில், உயிர் அறி­வி­யல் சித்தாந்தத் துறை­யில் முனை­வர் பட்­டம் பெறப் படித்­து­வ­ரு­கி­றார். அவர் பட்­டக்­கல்வி பயின்­ற­போது, சில மாண­வர்­க­ளுக்­குப் பயிற்­று­விப்­பா­ள­ரா­க­வும் ஆலோ­ச­க­ரா­க­வும் இருந்­த­தா­கப் பகிர்ந்­து­கொண்­டார். இதே­போல, தனது முனை­வர் பட்­டப்­ப­டிப்­பின் போதும் தன்­னால் முடிந்த வரை மற்ற மாண­வர்­க­ளுக்கு உதவ வேண்­டும் என்று விரும்­பு­கி­றார்.

இதன் மூலம் மாண­வர்­க­ளுக்கு உத­வு­வது மட்­டு­மின்றி, தனக்­குக் கற்­றல் துறை ஏற்­றதா என்­ப­தைக் கண்­ட­றிய முடி­யும் என்­கிறார். அது­மட்­டு­மன்றி, தனக்கு உயிர் தொழில்­நுட்­ப­

வி­யல் துறை­யி­லும் அறி­வி­யல் ஆலோ­ச­னைத் துறை­யி­லும் நாட்­ட­மி­ருப்­ப­தாக இவர் தெரி­விக்கிறார். ஆகை­யால், தனது முனை­வர் பட்­டப்­ப­டிப்­பின்­போது, தனக்­கு­ரிய ஒரு துறை­யைத் தேர்ந்­தெ­டுக்­கும் வாய்ப்பு கிடைக்­கும் என நம்­பு­கி­றார்.

"இறு­தி­யில் எத்­து­றை­யைத் தேர்ந்­தெ­டுத்­தா­லும் நல்ல ஆய்­வா­ள­ரா­க­வும் விஞ்­ஞா­னி­யா­க­வும் வருங்­கால சந்­த­தி­யி­ன­ருக்­குப் பயன்­படும் வகை­யில் ஆராய்ச்­சி­களை மேற்­கொள்ள வேண்­டும் என்­பதே என் விருப்­பம்," எனக் கூறு­கி­றார் இவர்.

மக்­கள் எதிர்­நோக்­கும் சில கொடிய நோய்­க­ளுக்கு ஒரு முடிவு கட்­டு­வ­தில் தனது பங்­கும் உண்டு என்­பது பெரு­மைக்­கு­ரிய ஒன்று என அவர் குறிப்­பிட்­டார்.