தொழில்­நு­ணுக்­கர்­க­ளாக உயர்­நி­லைப்­பள்ளி மாண­வர்­கள்

தொழில்­நு­ணுக்­கர்­க­ளாக உயர்­நி­லைப்­பள்ளி மாண­வர்­கள்

2 mins read
1bec46aa-07b1-4f2f-a3aa-d2436edf98d4
பிடோக் வியூ உயர்­நி­லைப் பள்­ளி­யின் ஹரிஷ் இளங்­கோ­வன் (வலம்), குரோ­ம­டோக்­ராஃபி மின்­னி­லக்க ஓவி­யம் பற்றி விளக்குகிறார். படம்: மோன­லிசா -

மோன­லிசா

செயற்கை நுண்­ண­றி­வு­டைய தானி­யங்கி கார், தடுப்­பு­க­ளைத் தாண்டி நக­ரும் இயந்­திர மனி­தன், சமூக ஊட­கத்­தில் விற்­பனை செய்­தல் உள்­ளிட்ட 16 பிரி­வு­களில் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கம், உயர்­

நி­லைப்­பள்ளி மாண­வர்­க­ளுக்­காக 'இக்­நைட் திறன்­கள் சவால்' போட்­டியை நடத்­தி­யது. இதில் பங்­கேற்ற செயின்ட் ஆண்ட்­ரூஸ் உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­கள் சூர்யா மது­சூ­தன் 15, ஷர்­மன் சுக­தே­வன் 15, தானி­யங்கி கார்­க­ளுக்­கான நிர­லாக்­கத்தை உரு­வாக்­கி­னர்.

"தானி­யங்கி கார்­களை ஒரு குறிப்­பிட்ட தடத்­தில் செலுத்தி அதன் மூலம் வரை­ப­டம் ஒன்றை உரு­வாக்க வேண்­டும்.

"இதற்­கான நிர­லாக்­கத்­தைக் குறிப்­பிட்ட நேரத்­திற்­குள் செய்­வது கடி­ன­மாக இருந்­தது. ஆனால் புதி­தாக பல­வற்­றைக் கற்­றுக்­கொண்­டோம். எதிர்­கா­லத்­தில் இது­போன்ற கார்­க­ளின் பயன்­பாட்­டி­னால் சாலை விபத்­து­கள் குறை­யும்," என்று கூறி­னர்.

பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்­நி­லைப் பள்­ளி­யைத் தன் குழு­வு­டன் பிர­தி­நி­தித்த வினோத்­கு­மார் நிஷா தேவ்­தர்­ஷன், 15, 'நிர­லாக்­கம் வழி குறி­பார்த்­துச் சுடு­தல்' பிரி­வில் இரண்­டாம் பரிசை வென்­றார்.

"இயந்­திர மனி­தன் பல தடை­க­ளைத் தாண்டி, ஒரு பொரு­ளைக் குறிபார்த்துச் சுட வேண்­டும். இறு­திப்­போட்­டி­யில் அத்­த­கைய தடை­

க­ளைக் கடப்­பது மிகக் கடி­ன­மாக இருந்தபோதி­லும் நாங்­கள் 'புளோக் ப்ரோ­கி­ரா­மிங்' உத்­தி­யைக் கையாண்டு இதற்­கான நிர­லாக்­கத்தை உரு­வாக்­கி­னோம்," என்று தேவ்­தர்­ஷன் கூறி­னார்.

இச்­ச­வா­லின் இறு­திப்­போட்டி இம்­மா­தம் 19ஆம் தேதி வியா­ழக்­கி­ழ­மை­யன்று தொழில்­நுட்­பக் கல்வி கழ­கத்­தில் நடை­பெற்­றது.

கல்வி அமைச்­சின் ஆத­ர­வோடு நடந்த இந்தப் போட்­டி­யில், 51 உயர்­நி­லைப் பள்­ளி­க­ளைச் சேர்ந்த 420க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

திறன்­கல்­வி­யின் பயன்

­க­ளை­யும் மதிப்­பை­யும் மாண­வர்­கள் தெரிந்­து­கொள்ள உத­வும் விதத்­தில் சவால் அமைந்­த­தா­க­வும் நிகழ்­வின் பரி­ச­ளிப்பு விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட, கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சின் நாடா­ளு­மன்றச் செய­லா­ளர் எரிக் சுவா கூறி­னார். இவர் திறன் சவால்­க­ள் இறு­திப்­ போட்­டி­யில் பங்­கு­பெற்றவர்களைப் பார்­வை­யிட்­ட­து­டன் பரி­சு­க­ளை­யும் வழங்­கி­னார்.

'குரோ­ம­டோக்­ராஃபி' மின்­னி­லக்க ஓவி­யச் சவால்' என்­னும் பிரி­வில் பங்­கெ­டுத்த பிடோக் வியூ உயர்­நி­லைப் பள்ளி மாண­வர் ஹரிஷ் இளங்­கோ­வன், 15, "குரோ­ம­டோக்­ராஃ­பி­யின் வண்­ண­ம­ய­மான உத்­தி­க­ளைப் பயன்­ப­டுத்தி, அதன் மூல­ம் கண்­க­வர் புத்­தாக்க கலை வடி­வ­மைப்­பு­களை மின்­னி­லக்க வடி­வில் உரு­வாக்­கி­னோம். வீடு­கள், கட்­ட­டங்­கள் போன்­ற­வற்­றின் உட்­பு­றக் கட்­ட­மைப்­பு­க­ளுக்கு இந்த வண்ண வடி­வ­மைப்­பு­கள் உத­வும்," என்று கூறி­னார்.