பத்தில் ஏழு ஊழியர்களுக்குச் சென்றாண்டு சம்பளம் அதிகரித்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. 2020ல் இந்த எண்ணிக்கை ஆறாக இருந்தது.
ஒரே நிறுவனத்துடன் குறைந்தது ஓராண்டு வேலை பார்த்த ஊழியர்களுக்குச் சம்பளம் 3.9 விழுக்காடு அதிகரித்ததாகக் கூறப்பட்டது. இந்த விகிதம் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டது.
2020ல் கிருமித் தொற்று ஏற்பட்டபோது சம்பள வளர்ச்சி விகிதம் 1.2 விழுக்காடாக இருந்தது.
அனைத்து துறைகளும் பொதுவாக மீட்சியடைந்ததைத் தொடர்ந்து, சம்பள வளர்ச்சி அதிகரித்துள்ளது. குறிப்பாக, சில்லறை வர்த்தகம் ஆக அதிக அளவில் 5.5 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

