தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் பஞ்சாங் இலகு ரயில் சேவையில் புதிய 19 ரயில்கள

1 mins read
25fede0a-4ba5-471d-a7c2-49238159884b
படம்: நிலப் போக்குவரத்து ஆணையம் -

புக்கிட் பஞ்சாங் இலகு ரயில் சேவையில் 19 புதிய ரயில்கள் சேர்க்கப்படவுள்ளதாக நில போக்குவரத்து ஆணையம் தெரிவுத்துள்ளது. புதிய ரயில்களில் முதல் ரயில் டிசம்பர் மாதம் செயல்பட தொடங்கும்.

புதிய ரயில் தற்போது சோதிக்கப்பட்டு வருகிறது. சோதனை காலம் குறித்த தகவல்களை ஆணையம் அறிவிக்கவில்லை. ஆனால் அது ஏறத்தாழ மூன்று முதல் ஆறு மாதங்கள் எடுக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இரண்டாவது புதிய ரயில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சேவையாற்றும் என்றும் அடுத்தடுத்த மாதங்களில் மற்ற புதிய ரயில்கள் சேவையைத் தொடங்கும் என்று ஆணையம் குறிப்பிட்டது.

புதிய ரயில் வண்டிகள் பிரெஞ்சு நிறுவனமான அல்ஸ்டாமால் வடிவமைக்கப்பட்டு சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. $344 மில்லியன் செலவில் தயாரிக்கப்படும் இப்புது ரயில்கள் புக்கிட் பஞ்சாங் எல்ஆர்டி சேவையில் தடங்கல்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கலாம். புக்கிட் பஞ்சாங் ரயில் சேவை இம்மாதம் இரண்டு பெரிய தடங்கல்கள் ஏற்பட்டன. திட்டமிட்டபடி 2024ஆம் ஆண்டுக்குள் ரயில் தடத்தின் புதுப்பிப்புப் பணிகளை நிறைவடையும் எனக் கூறப்பட்டது.