சொகுசு படகில் தீ

சொகுசு படகில் தீ

1 mins read
7d7689cb-283d-4d13-acf7-9de58175f887
படங்கள்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ வாசகர் -
multi-img1 of 3

மரினா கெப்பல் பேயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு சொகுசு படகில் தீ மூண்டது. யாருக்கும் காயமில்லை.

இன்று காலை 11.30 மணியளவில் தீ குறித்து சிங்கப்பூர்க் குடிமை தற்காப்புப் படைக்கு அழைப்பு வந்தது. தீயை அணைப்பதற்குக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எடுத்தது.

சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டுவரும் காணொளிகளில் படகிலிருந்து கரும் புறை வெளியேறுவது தெரிகிறது. புக்கிட் மேரா வட்டாரம் வரை புகை தென்பட்டது.

குறைந்தது பத்து தீயணைப்பாளர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடும் படங்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

தீக் குறித்து விசாரணை நடந்துவருகிறது.

Watch on YouTube