2021ல் ஆறு துறைகளில் ஆக அதிக சம்பள உயர்வு

சிங்­கப்­பூ­ரில் சென்ற ஆண்டு அனைத்­துத் துறை­க­ளி­லும் சம்­பள உயர்வு பதி­வா­னா­லும் குறிப்­பாக ஆறு துறை­களில் கொவிட்-19 கிருமிப்­ப­ர­வ­லுக்கு முன்­பி­ருந்­த­தை­வி­ட­வும் அதி­க­மான விகி­தத்­தில் ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளம் உயர்த்­தப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

சில்­லறை விற்­பனை, தொழில்­மு­றைச் சேவை, தக­வல் தொடர்பு, மொத்த விற்­பனை, உற்­பத்தி, கட்டு­மா­னம் ஆகி­யவை அந்­தத் துறை­கள் என்று அது கூறி­யது.

தக­வல் தொடர்பு, நிதிச் சேவை, உற்­பத்தி போன்ற துறை­களில் கிரு­மிப் பர­வ­லின்­போ­து­கூட வலு­வான சம்­பள உயர்வு பதி­வா­ன­தா­க­வும் இந்த நிலை 2021லும் தொடர்ந்­த­தா­க­வும் அமைச்சு குறிப்­பிட்­டது.

தக­வல் தொடர்­புத் துறைக்­கான சென்ற ஆண்­டின் சம்­பள உயர்வு 5.1 விழுக்­காடு என்று கூறப்­பட்­டது.

சில்­லறை விற்­ப­னைத் துறை­யில் காணப்பட்ட சம்பள உயர்வு 5.5 விழுக்­காடு.

இந்­தத் துறை­யில் மேலா­ளர் அல்­லது நிர்­வா­கி­கள் அல்­லா­தோ­ரின் சம்பளங்கள் 6.3 விழுக்காடு வரை உயர்ந்தன.

கிரு­மிப்­ப­ர­வல் கால­கட்­டத்­தில் மோச­மா­கப் பாதிக்­கப்­பட்ட துறை­களில்­கூட எல்­லை­கள் திறக்­கப்­பட்ட பிறகு ஆள்­பற்­றாக்­குறை நில­வு­வ­தால் ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளம் உயர்த்­தப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்சு தெரி­வித்­தது.

உதா­ர­ணத்­திற்கு ஹோட்­டல் துறை­யில் 2020ல் ஐந்து விழுக்­காட்­டிற்­கும் அதி­க­மா­கச் சம்­ப­ளக் குறைப்பு இடம்­பெற்­றது; ஆனால் தற்­போது அதில் 1.7 விழுக்­காடு வரை ஊழி­யர்க்­கான சம்­ப­ளம் உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

இருப்­பி­னும் உல­க­ளா­விய விநி­யோ­கச் சங்­கி­லி­யில் ஏற்­பட்ட அண்­மைய பாதிப்­பு­க­ளால் பண­வீக்­கம் அதி­க­மா­கவே இருக்­கும்; இத­னால் சம்­பள உயர்வு பாதிக்­கப்­படும் என மனி­த­வள அமைச்சு எச்­ச­ரித்­தது

சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் சென்ற ஆண்டு 7.6 விழுக்­காடு வளர்ச்­சி­கண்ட நிலை­யில் இங்­குள்ள முக்கால்­வா­சிக்­கும் அதி­க­மான நிறு­வ­னங்­கள் லாபம் ஈட்­டி­ய­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது.

கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு இடை­யி­லும் ஐந்து ஆண்­டில் இல்­லாத அளவு இந்­நி­று­வ­னங்­கள் லாபம் ஈட்­டி­ய­தாகக் கூறப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!