ஹாங்காங்கின் வளர்ச்சி குறித்து மூத்த அமைச்சர் டியோ நம்பிக்கை

ஹாங்காங்கின் வளர்ச்சி குறித்து மூத்த அமைச்சர் டியோ நம்பிக்கை

1 mins read
e1a5195c-488b-4e3d-b9b7-12336e59f38f
மூத்த அமைச்சர் டியோ (இடது), திருமதி லாம் (நடுவில்), வெளியுறவு அமைச்சர் விவியன். படம்: வெளியுறவு அமைச்சு -

மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் ஹங்­காங்­கின் வளர்ச்சி, தொட­ரும் வளப்­பம் ஆகி­யவை குறித்து நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.

ஹாங்­காங் தலைமை நிர்­வாகி கேரி லாமு­ட­னான சந்­திப்­பில் நேற்று அவர் அவ்­வாறு கூறி­னார்.

'ஒரு நாடு, இரு ஆட்சி­முறை' கட்­ட­மைப்­பின்­கீழ் ஹாங்­காங் தொடர்ந்து நன்­மை­ய­டை­யும் என்று திரு டியோ திரு­மதி லாமி­டம் கூறி­னார். சிங்­கப்­பூ­ருக்­கும் ஹாங்­காங்­கிற்­கும் இடை­யி­லான உற­வு­கள் சிறப்­ப­தற்­குத் திரு­வாட்டி லாம் அளித்த ஆத­ர­விற்கு அவர் நன்றி தெரி­வித்­தார்.

நகர்ப்­புற மேம்­பாடு, கல்வி, கலை, கலா­சா­ரம் போன்ற துறை­களில் இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்­து­வ­தன் தொடர்­பில் இரு தலை­வர்­களும் கலந்­து­ரை­யா­டி­னர். ஹாங்­காங்­கில் தேர்­த­லுக்­குப் பிறகு பொறுப்­பேற்­க­வி­ருக்­கும் புதிய தலை­வர்­க­ளை­யும் பதவி ஓய்­வு­பெ­றும் தற்­போ­தைய தலை­வர்­க­ளை­யும் சந்­திக்­கத் திரு டியோ அங்கு சென்­றுள்­ளார்.

வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், வெளி­யு­றவு அமைச்­சின் அதி­கா­ரி­கள் ஆகி­யோ­ரும் மூத்த அமைச்­சர் டியோ­வு­டன் சென்­றுள்­ள­னர்.