சாங்கியில் மீண்டும் ‘எஸ்ஐஏ’ பயணிகளுக்கான ஓய்வறைகள்

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமான நிறு­வ­னம் சாங்கி விமான நிலை­யத்­தில் அமைந்­தி­ருக்­கும் அதன் பய­ணி­க­ளுக்­கான ஓய்­வ­றை­களை மீண்­டும் திறந்­துள்­ளது.

சாங்கி விமான நிலை­யத்­தின் மூன்­றாம் முனை­யத்­தில் உள்ள 'சில்­வர்­கி­ரிஸ்', 'கிரிஸ்­ஃப்­ளை­யர் கோல்ட்' ஓய்­வ­றை­கள் இன்று மாலை ஆறு மணி­யில் இருந்து பய­ணி­கள் பயன்­பாட்­டுக்­குத் திறந்­து­வி­டப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

50 மில்­லி­யன் வெள்ளி செல­வில் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் இந்த ஓய்­வ­றை­க­ளைப் புதுப்­பித்­துள்­ளது.

மேம்­ப­டுத்­தப்­பட்ட அம்­சங்­க­ளைக் கொண்­டி­ருக்­கும் இந்த ஓய்­வ­றை­கள் பய­ணி­க­ளுக்­குச் சிறந்த பயண அனு­ப­வத்­தைத் தரும் என்று நிறு­வ­னம் நம்­பிக்கை தெரி­வித்­தது.

விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யில் 'எஸ்­ஐஏ' அதன் முன்­னிலை இடத்­தைத் தக்­க­வைத்­துக்­கொள்ள இத்­த­கைய புதுப்­பிப்­புப் பணி கைகொ­டுக்­கும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

நேற்று நடை­பெற்ற திறப்­பு­வி­ழா­வில் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் கலந்­து­கொண்­டார்.

புதுப்­பிக்­கப்­பட்ட ஓய்­வ­றை­கள் மீண்­டும் திறக்­கப்­ப­டு­வது சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னத்­தின் மீள்­தி­ற­னைக் காட்­டு­வ­தாக அவர் தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

மேலும் இது விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யின் சிறப்­பான வருங்­கா­லத்தை முன்­னு­ரைப்­ப­தா­க­வும் அமைச்­சர் ஈஸ்­வ­ரன் கூறி­னார். சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னங்­கள் தற்­போது 95 இடங்­களுக்­குச் சேவை வழங்­கு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!