கெப்பல் பே படகுத் தீச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை

கெப்பல் பே படகுத் தீச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை

1 mins read
397661a0-d566-4677-a0c9-888540510095
-

'மரினா அட் கெப்பல் பே'யில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் நேற்று மூண்ட தீயை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் தீயணைப்புப் படையினர் அணைத்தனர். சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

தீச் சம்பவம் குறித்து நேற்று காலை 11.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக அது குறிப்பிட்டது. தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை இடம்பெறுகிறது.

படம்:

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் வாச­கர்