மக்களின் நல்வாழ்வுக்கு ஊழியர் நலத்திட்டம் முக்கியம்

மக்களின் நல்வாழ்வுக்கு ஊழியர் நலத்திட்டம் முக்கியம்

2 mins read
68742527-d200-480b-94ba-511a52258ec1
-

சிங்­கப்­பூ­ரர்­க­ளின் நல்­வாழ்­வுக்கு ஊழி­யர் நலத்­திட்­டங்­களை மேம்

படுத்­து­வது மூலம் அர­சாங்­கத்­து­டன் நிறு­வ­னங்­கள் இணைந்து செயல்­ப­ட­லாம் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று தெரி­வித்­தார்.

ஆரோக்­கி­யத்­தைத் தரும் உண­வுப்­பொ­ருட்­களை உற்­பத்தி செய்­வது, நோய் தடுப்பு நட­வ­டிக்­கை­களை மேம்­ப­டுத்தி மின்­னி­லக்­கத் தீர்­வு­களை அதி­க­ரிப்­பது ஆகி­யவை வாயி­லாக வர்த்­த­கங்­கள் பங்­க­ளிக்­க­லாம் என்­றார் அமைச்­சர் ஓங்.

கிராண்ட் ஹயட் ஹோட்­ட­லில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு மற்­றும் மக்­கள் நல்­வாழ்வு குறித்து ஐரோப்­பிய வர்த்­தக தொழிற்­ச­பை­யின் அறிக்கை நேற்று வெளி­யி­டப்­பட்­டது. நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய அமைச்­சர் ஓங், இக்

கருத்­து­க­ளைத் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் மக்­க­ளின் நல்­வாழ்வு நீடித்து நிலைத்­தி­ருக்க அடுத்த சில ஆண்­டு­களில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கை­களை அறிக்கை மேற்­கோள் காட்­டி­யது.

சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரக் கட்­ட­மைப்பு பெரிய அள­வி­லாக மறு­சீ­ர­மைக்­கப்­ப­டு­கிறது. அதற்கு 'ஹெல்­தி­யர்­எஸ்ஜி' என்று பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இது­கு­றித்து சுகா­தார அமைச்சு அறி­வித்­ததை அடுத்து சரி­யான நேரத்­தில் இந்த அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக திரு ஓங் கூறி­னார்.

நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்­ப­தை­விட நோய் வரும் முன் காக்­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு நாட்­டின் சுகா­தா­ரக் கட்­ட­மைப்பு மாறு­கிறது.

நோய் வரும் முன் காக்­கும் அணு­கு­மு­றைக்கு கூட்டு முயற்சி மிக­வும் அவ­சி­யம் என்­பதை அமைச்­சர் ஓங் வலி­யு­றுத்­தி­னார். இந்த அணு­கு­மு­றையை முன்­கூட்­டியே கடைப்­பி­டித்­தால் அது எளி­தா­க­வும் கட்­டுப்­ப­டி­யான விலை­யி­லும் இருக்­கும் என்­றார் அவர்.

மேலும், பழக்­கத்தை ஏற்­ப­டுத்­திக்­கொண்­டால் சிங்­கப்­பூ­ரர்­கள் அந்த நட­வ­டிக்­கை­களை ரசித்து செயல்­ப­டு­வர் என்று திரு ஓங் கூறி­னார். அவ­ர­வர் வீடு­களில் நண்­பர்­கள், குடும்­பத்­தா­ரு­டன் இத்­த­கைய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­லாம் என்­றார் திரு ஓங்.

"இந்த வித்­தி­யா­சங்­கள் கார­ண­மாக நோயைத் தடுக்க முன்­கூட்­டியே மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­க­ளின்­கீழ் நோயா­ளி­கள் பய­னீட்­டா­ளர்­க­ளாக மாறு­கின்­ற­னர். இந்த அணு­கு­முறை புத்­தாக்­கத்­துக்­கும் நிறு­வ­னங்­கள் மற்­றும் தொழிற்­து­றை­யின் பங்­கேற்­புக்கும் வாய்ப்பு தரு­கிறது.

சுகா­தாரத்தை முன்­னிட்டு பொதுத் துறை, தனி­யார் துறை, பொது­மக்­கள் இடையே வலி­மை­மிக்க பங்­கா­ளித்­து­வத்தை உரு­வாக்­கும் வாய்ப்பு கிடைக்­கிறது," என்று திரு ஓங் தெரி­வித்­தார்.

புதிய அணு­கு­மு­றை­யில் நிறு­வ­னங்­கள் இணைந்து பங்­க­ளிக்­கக்­கூ­டிய மூன்று அம்­சங்­களை அவர் மேற்­கோள்­காட்­டி­னார். மக்­க­ளின் நல்­வாழ்வை மேம்­ப­டுத்த ஊழி­யர் நல்­வாழ்வு மிக­வும் முக்­கி­யம் என்­பதை அவர் வலி­யு­றுத்­தி­னார். ஆரோக்­கி­ய­மான ஊழி­ய­ரணி கூடு­தல் உற்­பத்­தித் திற­னுக்கு கார­ண­மாக இருக்­கும் என்­றார் அவர்.

அடுத்­த­தாக, ஆரோக்­கி­ய­மான உண­வுப்­பொ­ருட்­க­ளின் விலை அதி­கம் என்ற எண்­ணம் தவறு என்­பதை மக்­க­ளுக்­குப் புரிய வைக்க வேண்­டும் என்று அமைச்­சர் ஓங் தெரி­வித்­தார். நோய் வரும் முன் காக்­கும் நட­வ­டிக்­கை­களை மேம்­ப­டுத்­தும் மின்­னி­லக்­கத் தீர்­வு­களை உரு­வாக்­கு­வது முக்­கி­யம் என்­றும் அவர் கூறி­னார்.

இந்த மின்­னி­லக்­கத் தீர்­வு­கள் மூலம் மக்­க­ளின் தூக்­கம், உடற்­

ப­யிற்சி போன்­ற­வற்றை ஒழுங்­கு

­ப­டுத்­த­லாம் என்­றார் அவர்.