கோழி இறைச்சி ஏற்றுமதியை தற்போதைக்கு நிறுத்திவைக்கப்போவதாக மலேசியா அண்மையில் அறிவித்தது. இந்தத் தடை நாளை முதல் நடப்புக்கு வருகிறது.
மலேசியாவில் கோழி இறைச்சியின் விலை சீராகும் வரை இந்தத் தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தடை குறித்து கவலை இல்லை என்று சிங்கப்பூரில் உள்ள கோழிச் சோறு பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள பல கோழிச் சோறு கடைகள் உறைந்த கோழி இறைச்சிக்கு மாறுவதே இதற்குக் காரணம்.
கோழிச் சோறு கடைகள் உறைந்த கோழி இறைச்சியைப் பயன்படுத்தினாலும் தொடர்ந்து ஆதரவு தரப்போவதாக வாடிக்கையாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர். நேற்று மதிய உணவு நேரத்தில் தீவெங்கும் உள்ள பல கோழிச் சோறு கடைகளில் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் கூறினர்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

