சிறுவனிடம் பாலியல் சேவை நாடிய ஆடவர்

சிறுவனிடம் பாலியல் சேவை நாடிய ஆடவர்

1 mins read
b56842b6-d579-46fa-aa4a-d9e9c253fad9
-

18 வய­துக்­கும் குறை­வான சிறு­வ­னி­டம் ரொக்­கம் கொடுத்து பாலி­யல் சேவை நாடி­ய­தாக யூடி­யூப் தளத்­தில் சொந்த ஒளி­வழி வைத்­தி­ருக்­கும் டீ கோஷ் என்று அழைக்­கப்­படும் டேரல் இயன் கோஷிக்கு எதி­ராக வழக்கு விசா­ரணை நடத்­தப்­பட்­டது.

இதில் அவர் குற்­ற­வாளி என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 33 வயது கோஷி ஒப்புக்கொண்டார்.

ஆபா­சப் படம் எடுத்த குற்­றத்­தை­யும் அவர் ஒப்­புக்­கொண்­டார்.

மற்றோர் ஆண்­ணு­டன் தாம் பாலி­யல் உறவு கொண்­டதை அவர் காணொளி எடுத்­த­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அவ­ருக்குத் தண்டனை விதிக்கும்போது மேலும் நான்கு குற்­றச்­சாட்­டு­கள் கருத்­தில் கொள்­ளப்­படும்.

தண்டனை விதிப்புக்கு முன்பு மனநலக் கழகத்தில் மனநலப் பரிசோதனை செய்துகொள்ளும்படி கோஷிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.