வர்த்தக கட்டடமான சுல்தான் பிளாசா இரண்டாவது முறையாக ஒட்டுமொத்த விற்பனைக்கு முயற்சி செய்கிறது.
ஒட்டுமொத்த விற்பனை மூலம் $360 மில்லியன் பெற அது எதிர்பார்க்கிறது. 2019ஆம் ஆண்டில் முதல்முறையாக ஒட்டுமொத்த விற்பனை முயற்சியில் அது இறங்கியபோது எதிர்பார்க்கப்படும் தொகையாக $380 மில்லியன் நிர்ணயிக்கப்பட்டது.
45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்தக் கட்டடத்துக்கான ஒட்டுமொத்த விற்பனை இன்று தொடங்குகிறது.
"அண்மைய காலமாக புதிய குடியிருப்புகளுக்கான விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. எனவே, பழைய கட்டடங்களை வாங்கி அவற்றுக்குப் பதிலாக அவ்விடங்களில் புதிய குடியிருப்பு
களைக் கட்ட சொத்து மேம்பாட்டாளர்களிடையே ஆர்வம் கூடியுள்ளது," என்று அதை சந்தைப்படுத்தும் டீக்வா சொத்து நிறுவனம் கூறியது.
100 ஜாலான் சுல்தானில் அமைந்துள்ள சுல்தான் பிளாசா 52,471 சதுர அடி பரப்பளவு கொண்ட வர்த்தக கட்டடமாகும். அதில் 211 கடைகளும் 33 அலுவலகங்களும் உள்ளன.
எதிர்பார்க்கப்பட்டதுபோல
ஒட்டுமொத்த விற்பனை நடந்
தேறினால் ஒவ்வொரு கடைக்காரரும் $162,900லிருந்து $46.3 மில்லியன் வரை பெறக்கூடும்.
அலுவலக உரிமையாளர்கள் $619,800லிருந்து $2.05 மில்லியன் வரை பெறக்கூடும் என்று டீக்வா சொத்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு சியாவ் டீக் ஹுவா கூறினார்.

