உயரத்திலிருந்து விழுந்து வெளிநாட்டு ஊழியர் மரணம்

உயரத்திலிருந்து விழுந்து வெளிநாட்டு ஊழியர் மரணம்

1 mins read
629027fe-031c-4c77-a23c-fdc3be94b7b3
படம்: கூகிள் வரைப்படம் -

ஒரு கட்டடத்தின் கூரையில் வேலை பார்த்துகொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் உயரத்திலிருந்து விழுந்து மாண்டார்.

வெஸ்ட் கோஸ்ட் கிரசென்டில் அமைந்துள்ள ஒரு கூட்டுரிமை குடியிருப்புக் கட்டடத்தின் கூரையைப் பழுதுபார்த்து கொண்டிருந்தபோது அவர் கிட்டத்திட்ட 20 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

தேசிய பல்கலைகழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

மாண்டவர் பங்களாதே‌ஷ் நாட்டைச் சேர்ந்த 37 வயது ஆடவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாரம் நடந்திருக்கும் மூன்றாவது வேலையிட மரணம் இது.

இந்து ஆண்டுமட்டும் 25 பேர் வேலையிடத்தில் மடிந்தனர். ஆண்டு தொடக்த்திலிருந்து மே 6ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் 20 வேலையிட மரணங்கள் நடந்தன.