சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட 21 பேர் கைது

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட 21 பேர் கைது

1 mins read
5a71fafc-1f0b-4362-acb5-dd6d390b5099
இரண்டு நாள் சோதனையில் 21 பேர் கைது (படம்: சிங்கப்பூர்க் காவல் துறை) -

பிடோக், சாங்கி ஆகிய வட்டாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சட்டவிரோத சூதாட்டம் உள்ளிட்ட சட்டவிராத நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டு நாள் சோதனையில் அவர்கள் பிடிப்பட்டனர். அவர்கள் 29 வயதுக்கும் 76 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனக் காவல் துறை தெரிவித்தது.

முதல் சோதனையில் சட்டவிரோத சூதாட்டத்தில் பங்கெடுத்த ஒன்பது ஆடவர்கள் சிக்கினர். அவர்களிடமிருந்து $75,000 ரொக்கமும் மூன்று கைதொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றொரு சோதனை நடவடிக்கையில் எட்டு ஆடவர்களும் ஒரு 68 வயது பெண்ணும் கைதுசெய்யப்பட்டனர். அவர்களும் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

நியூ அப்பர் சாங்கி ரோடில் உள்ள இரண்டு உடல்பிடித்துவிடும் நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நிலையத்தில் வேலை செய்பவர்கள் பாலியல் சேவைகளை வழங்குவதைத் தடுக்க போதிய நடவடிக்கைகள் நிலையங்கள் எடுக்கப்படவில்லை. இதற்கு மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.