பசுமை சூழ்ந்த நிலப் போக்கு
வரத்தை ஊக்கப்படுத்தும் தொடர் கண்காட்சி ஒன்றை நிலப் போக்குவரத்து ஆணையம் தொடங்கி உள்ளது. கார் பயன்பாட்டைக் குறைத்து மாணவர்கள் நடந்து செல்வதையும் ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதையும் ஊக்குவிக்கும் நோக்கில் இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஹேம்ஷயர் ரோட்டில் உள்ள ஆணையத்தின் தலைமையகத்திலுள்ள நடமாட்டக் கலைக்
கூடத்தில் நடைபெறும் இக்கண்காட்சியைப் பொதுமக்கள் சென்று காணலாம். அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சி தொடரும்.
போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி, ரிவர் வேலி தொடக்கப் பள்ளி போன்றவற்றின் மாணவர்கள் கண்காட்சியைக் காண வந்திருந்தனர்.
கண்காட்சி ஐந்து அரங்கு
களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் போக்குவரத்து முறையின் எரிசக்தி ஆற்றலை விளக்கும் வகையில் பேருந்து பணிமனைகளில் அமைக்கப்படும் சூரியசக்தித் தகடுகள், மின்சாரப் பேருந்துகள் போன்றவை தொடர்பான நடவடிக்கைகள் இந்த அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

