மின்னிலக்கப் பொருளியல்: கனடாவுக்கு பிரதமர் லீ வரவேற்பு

மின்னிலக்கப் பொருளியல்: கனடாவுக்கு பிரதமர் லீ வரவேற்பு

1 mins read
e000df8f-d096-4c58-b481-8b679e248fe3
-

மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் பங்­கா­ளித்­துவ உடன்­பாட்­டில் இணை­வ­தற்கு கனடா ஆர்­வம் காட்­டி­யுள்­ளதை சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங் வர­வேற்­றுள்­ளார்.

தொலை­பேசி வழி கனடா பிர­த­மர் ஜஸ்­டின் ட்ருடோவுடன் உரை­யா­டி­ய­போது திரு லீ, உடன்­பாட்­டில் இணைய கனடா விண்­ணப்­பம் செய்­தி­ருப்­பதை வர­வேற்­றார்.

இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உன்­னத உறவை இவ்­விரு தலை­வர்­களும் மறு­உ­று­திப்­ப­டுத்­தி­னர்.

பொரு­ளி­யல், உள்­கட்­ட­மைப்பு, அறி­வார்ந்த நக­ரங்­கள் மற்­றும் இணை­யப் பாது­காப்பு போன்ற அம்­சங்­களில் உன்­னத உறவு நீடிப்­பதை பிர­த­மர் லீயின் பத்­தி­ரி­கைச் செய­லா­ளர் தமது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டார்.

ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் கன­டா­வின் ஈடு­பாடு வளர்ந்து வரு­வது பற்­றிப் பேசிய இரு பிர­த­மர்­களும் உக்­ரேன் மீதான ரஷ்­யப் படை­யெ­டுப்பு குறித்­தும் விவா­தித்­த­னர்.

மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் பங்­கா­ளித்­துவ உடன்­பாடு என்­பது உல­கின் முதல் மின்­னி­லக்க வர்த்­தக உடன்­பாடு.

இதில் சிங்­கப்­பூர், சிலி, நியூ­

சி­லாந்து போன்ற நாடு­கள் 2020 ஜூன் மாதம் கையெ­ழுத்­திட்­டன.

தர­வுப் பாது­காப்பு, செயற்கை நுண்­ண­றிவு, புதிய தொழில்­நுட்பங்­கள் போன்ற அம்­சங்­களில் மின்­னி­லக்­கப் பொரு­ளி­ய­லுக்­கான விதி­முறைக் கட்­ட­மைப்பை உரு­வாக்க உடன்­பாடு வழி­வகை செய்­கிறது.

இந்த உடன்­பாட்­டில் இணை­யப்­போ­வ­தாக சீனா­வும் தென்­கொ­ரி­யா­வும் கடந்த ஆண்­டின் இறு­தி­வாக்­கில் தெரி­வித்­தி­ருந்­தன. அதன் தொடர்ச்­சியாக, இம்­மா­தத் தொடக்­கத்­தில், உடன்­பாட்­டில் இணை­ய­வ­தற்­கான விண்­ணப்­பத்தை கனடா அனுப்­பி­யது.

இதில் இணைந்­து­கொள்­ளு­மாறு தாய்­லாந்தை சிங்­கப்­பூர் அழைத்­த­தாக தாய்­லாந்து செய்­தித்­த­ளங்­கள் கடந்த வாரம் குறிப்­பிட்­டி­ருந்­தன.