141 மின்னிலக்க பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

141 மின்னிலக்க பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

2 mins read
a5eda82b-4da0-4de3-b9e2-0123640b7bee
-

பிறப்பு, இறப்பைப் பதிவுசெய்யும் புதிய நடைமுறை ஞாயிற்றுக்கிழமை நடப்புக்கு வந்தது

அச்­ச­டிக்­கப்­பட்ட பிறப்­புச் சான்­றி­தழ்­க­ளுக்­குப் பதி­லாக மின்­னி­லக்­கச் சான்­றி­தழ்­கள் வழங்­கப்­பட்ட முதல் நாளான கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை, குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம் (ஐசிஏ) 141 மின்­னி­லக்க பிறப்­புச் சான்­றி­தழ்­களை வழங்­கி­யது.

நேற்று முன்­தி­னம் மாலை 6 மணி நில­வ­ரப்­படி, மேலும் 78 மின்­னி­லக்­கச் சான்­றி­தழ்­களை தான் வழங்­கி­ய­தாக ஆணை­யம் கூறி­யது.

கடந்த ஐந்து ஆண்­டு­களில் ஒவ்­வோர் ஆண்­டும் ஏறக்­கு­றைய 39,100 பிறப்­புச் சான்­றி­தழ்­கள் வழங்­கப்­பட்­ட­தாக ஆணை­யம் சொன்­னது. அந்த வகை­யில், முன்­ன­தாக நாள் ஒன்­றுக்கு சரா­ச­ரி­யாக 107 அச்­ச­டிக்­கப்­பட்ட பிறப்­புச் சான்­றி­தழ்­கள் வழங்­கப்­பட்டு வந்­தன. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை வழங்­கப்­பட்ட மின்­னி­லக்­கச் சான்­றி­தழ்­களின் எண்­ணிக்கை, இந்­தச் சரா­சரி­யை­விட அதி­கம்.

பதி­வு­செய்­யும் முறையை எளி­தாக்­கும் முயற்­சி­களில் ஒரு பகுதி­யாக, அச்­ச­டிக்­கப்­பட்ட பிறப்பு, இறப்புச் சான்­றி­தழ்­கள் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யில் இருந்து வழங்­கப்­பட மாட்டா என ஆணை­யம் முன்­ன­தாக அறி­வித்­தி­ருந்­தது.

மாறாக, தற்­போது மின்­னி­லக்கச் சான்­றி­தழ்­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. பதிவு நடை­முறை அனைத்­தும் இணை­யம்­வழி செய்­யப்­ப­டு­கிறது. பிறப்பு, இறப்புப் பதி­வு­களை நேர­டி­யாக செய்­யும் பதிவு முறை இனி வழங்­கப்­ப­டாது.

இதற்கு முன்­ன­தாக, குழந்தை பிறந்த மருத்­து­வ­ம­னை­யிலோ ஐசிஏ கட்­ட­டத்­திலோ குழந்­தை­யின் பிறப்­பைப் பெற்­றோர் பதி­வு­செய்ய வேண்­டி­யி­ருந்­தது.

குழந்­தை­யின் பிறப்பை இணை­யத்­தில் பதி­வு­செய்­வ­தற்­கான தெரிவு முன்­ன­தாக பெற்­றோ­ருக்கு வழங்­கப்­பட்­டது. ஆனால், அச்­ச­டிக்­கப்­பட்ட சான்­றி­தழை மருத்­து­வ­மனை­யிலோ ஐசிஏ கட்­ட­டத்­திலோ அவர்­கள் பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது.

தங்­கள் குழந்­தை­யின் பிறப்பை 'லைஃப்எஸ்ஜி' செய­லி­யிலோ அதன் இணை­யப் பக்­கத்­திலோ பெற்­றோர் பதி­வு­செய்­ய­லாம். மின்­னி­லக்­கச் சான்­றி­த­ழைப் பதி­வி­றக்­கம் செய்ய அவர்­க­ளுக்கு உட­ன­டி­யாக தக­வல் வழங்­கப்­படும்.

சான்­றி­த­ழைப் பதி­வி­றக்­கம் செய்ய அவர்­க­ளுக்கு 90 நாள்­கள் அவ­கா­சம் வழங்­கப்­படும். தங்­க­ளது மின்­னி­லக்­கச் சாத­னங்­களில் அவர்­கள் சான்­றி­தழை சேமித்து வைத்துக்­கொள்­ள­லாம்.

பதி­வு­செய்­யும் நடை­மு­றை­யில் சிர­மங்­கள் எதிர்­நோக்­கப்­பட்­டது குறித்து பெற்­றோ­ரி­டம் இருந்து ஆணை­யத்­துக்கு கருத்து எது­வும் கிடைக்­க­வில்லை என்று ஆணை­யப் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

குழந்­தை­யின் பிறப்­பைப் பதி­வு­செய்ய பெற்­றோ­ருக்கு 42 நாள் அவ­கா­சம் வழங்­கப்­ப­டு­கிறது. பிறப்பு, இறப்பு அனைத்­தை­யும் அதி­கா­ரி­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­து­வது கட்­டா­ய­மா­கும்.