பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கு உதவும் செயலி

பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கு உதவும் செயலி

1 mins read
1b4e5197-3901-4bd9-9136-9b4cdf8261d5
உட்லண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து நடுவத்தில் பார்வைத்திறன் குறைபாடு உடையோர் நடமாட 'நேவிலென்ஸ்' செயலி உதவும். படம்: சாவ்பாவ் -

உட்­லண்ட்ஸ் ஒருங்­கி­ணைந்த போக்­கு­வ­ரத்து நடு­வத்­தில் உள்ள எஸ்­எம்­ஆர்டி பேருந்து நிலை­யத்­தில் பார்­வைத்­தி­றன் குறை­பாடு உடை­யோர் நட­மாட உத­வும் செயலி ஒன்று பொது­மக்­க­ளுக்கு அறி­மு­கம் செய்­யப்­பட்­டுள்­ளது.

'நேவி­லென்ஸ்' எனப்­படும் அந்தச் செயலி, போக்­கு­வ­ரத்து நடு­வத்­தில் உள்ள 14 பேருந்து நிறுத்­து­மி­டங்­க­ளை­யும் உள்­ள­டக்கி விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஸ்பெ­யி­னில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள இந்­தச் செயலி, பய­ணி­கள் செல்ல விரும்­பும் பேருந்து நிறுத்து­மி­டங்­க­ளுக்கு வழி­காட்­டு­கிறது.

புக்­கிட் பாஞ்­சாங்­கி­லும் சுவா சூ காங்­கி­லும் உள்ள தனது பேருந்து நிலை­யங்­க­ளுக்கு இந்­தச் செய­லியை ஆண்­டி­று­திக்­குள் தான் அறி­மு­கம் செய்­ய­வி­ருப்­பதாக எஸ்­எம்­ஆர்டி கூறி­யது.