கொவிட்-19 நிவாரண நிதி 2023 மார்ச் 31 வரை நீட்டிப்பு

கொவிட்-19 நிவாரண நிதி 2023 மார்ச் 31 வரை நீட்டிப்பு

2 mins read
c41a7651-502c-4b86-9de0-388f5fa75c10
-

கொவிட்-19 பெருந்­தொற்­றால் வாழ்­வா­தா­ரம் பாதிப்­ப­டைந்­துள்ள சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கான கொவிட்-19 நிவா­ரண நிதி நீட்­டிக்­கப்­பட்­டு உள்ளது. வாழ்க்­கைச் செல­வி­ன­மும் பண­வீக்­க­மும் அதி­க­ரித்­து­வரும் நிலை­யில், கூடு­த­லா­னோருக்கு இந்த நிதி கைகொ­டுக்­கும்.

கோங் மெங் சான்-சமூக மேம்­பாட்டு மன்­றம் கொவிட்-19 நிவா­ரண நிதி 2020ஆம் ஆண்டு டிசம்­பரில் தொடங்­கப்­பட்­டது. அதற்­கான விண்­ணப்­பங்­கள் 2023 மார்ச் 31ஆம் தேதி­வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளன. விண்­ணப்பக்காலம் முன்­ன­தாக கடந்த ஆண்டு டிசம்­ப­ரில் முடி­வடைய இருந்­தது.

இந்த நிதி நீட்­டிக்­கப்­ப­டு­வ­தன் பொருட்டு, அதற்­குத் தகு­தி­பெ­றும் ஒவ்­வொரு குடும்­பத்­துக்­கும் $800 வழங்­கப்­படும். முன்­ன­தாக, இந்­தத் தொகை $500ஆக இருந்­தது.

இங்­குள்ள ஐந்து சமூக மேம்­பாட்டு மன்­றங்­களும் பௌத்த ஆல­ய­மான கோங் மெங் சான் போர் கார்க் சீ மடா­ல­ய­மும் நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில், நிதி நீட்­டிக்­கப்­ப­டு­வது குறித்த அறி­விப்பு வெளி­யா­கி­யது.

இந்த நிதிக்கு ஆல­யம் $2 மில்­லி­யன் நன்­கொடை வழங்­கி­யுள்­ளது. அந்த நன்­கொ­டைக்கு ஈடாக சமூக மேம்­பாட்டு மன்­றங்­களும் $2 மில்­லி­யனை வழங்­கி­யுள்­ளன. ஆக மொத்­தம், இந்த நிதிக்கு $4 மில்­லி­யன் கிடைத்­துள்­ளது.

பிரைட் ஹில் டிரை­வில் அமைந்­துள்ள அந்த மடா­ல­யத்­திலோ எந்­த­வொரு சமூக மன்­றத்­திலோ இந்த நிதிக்­காக விண்­ணப்­பிக்­க­லாம்.

விண்­ணப்­ப­தா­ரர்­கள், அச்­சி­டப்­பட்ட விண்­ணப்­பப் படி­வத்தை தேவை­யான ஆவ­ணங்­க­ளு­டன் சமர்ப்­பிக்­க­லாம். ஐந்து சமூக மேம்­பாட்டு மன்­றங்­க­ளின் இணை­யப் பக்­கத்­தி­லும் ஆவ­ணங்­க­ளைப் பதி­வேற்­றம் செய்து அவர்­கள் விண்­ணப்­பங்­க­ளைச் சமர்ப்­பிக்­க­லாம்.

இந்த நிதிக்­குத் தகு­தி­பெற, விண்­ணப்­ப­தா­ரர்­கள் 21 மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டை­ய­வர்­களாக இருக்­க­வேண்­டும். விண்­ணப்­பம் செய்­யும் தரு­ணத்­தில், குறைந்­தது இரு மாதங்­க­ளுக்கு சம்­ப­ள­மில்லா கட்­டாய விடுப்­பில் சென்­ற­தால் வரு­மான இழப்பை எதிர்­நோக்­கி­ய­வ­ரா­கவோ ஆட்­குறைப்­புக்கு ஆளா­ன­வ­ரா­கவோ பணி­நீக்­கம் செய்­யப்­பட்­ட­வ­ரா­கவோ இருக்­க­வேண்­டும்.

மாதச் சம்­ப­ள­மாக $3,000 அல்­லது அதற்­குக் குறை­வாக பெறு­வோர், குறைந்­தது 30 விழுக்­காடு வரு­வாய் இழப்­பைச் சந்­திக்க நேரிட்­டா­லும் இந்த நிதிக்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

சமூ­கத்­தின் தேவை­க­ளைப் புரிந்து­கொள்ள சமூக மேம்­பாட்டு மன்­றங்­கள் நல்ல நிலை­யில் இருப்­பதாக மத்­திய சிங்­கப்­பூர் மாவட்ட மேயர் டெனிஸ் புவா சொன்­னார்.