$344,000 கையாடல்: மருத்துவமனை ஊழியருக்குச் சிறை

$344,000 கையாடல்: மருத்துவமனை ஊழியருக்குச் சிறை

2 mins read
4e05a8e6-26f9-4903-9a88-355a7325e92f
-

கிளே­னி­கல்ஸ் மருத்­து­வ­ம­னை­யின் வர்த்­தக அலு­வ­ல­கத் துறை­யில் மேலா­ள­ரா­கப் பணி­யாற்­றி­ய­போது தாமஸ் இங் எங் ஹாவ், 48, நோயாளி­க­ளின் மருத்­து­வக் கட்­ட­ணங்­களை மாற்­றி­ய­மைத்­தார்.

மருத்து­வ­மனை படுக்­கைப் பிரிவை அவர் கீழ்­நோக்­கித் திருத்­தி­னார்.

நோயா­ளி­கள் மருத்­து­வக் கட்­ட­ணத்­தைச் செலுத்­தி­விட்டு, அவர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் இருந்து வசிப்­பி­டம் திரும்­பிய பிறகே இங் இவ்­வாறு செய்­தார்.

கட்­டண வித்­தி­யா­சத்தை எடுத்துக்­கொண்ட அவர், தமது சொந்த செல­வு­க­ளுக்கு அதைப் பயன்­ப­டுத்­தி­னார். அவ்­வாறு தொடர்ந்து செய்து வந்த அவர், மூன்று ஆண்டு கால­கட்­டத்­தில் கிட்­டத்­தட்ட $344,000ஐ கையா­டி­னார்.

இங்­கிற்கு நேற்று மூன்று ஆண்டு, ஒன்­பது மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. $316,000க்கு­மேல் மதிப்­பு­டைய தொகை தொடர்­பில் நம்­பிக்கை மோசடி செய்த ஒரு குற்­றச்­சாட்டை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

பொய்க் கையெ­ழுத்­திட்­ட­தாக எட்­டுக் குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் அவர் ஒப்­புக்­கொண்­டார். அவருக்குத் தண்­டனை விதிப்­ப­தில் மற்ற 30 குற்­றச்­சாட்­டு­களும் கருத்தில்­கொள்­ளப்­பட்­டன.

2016க்கும் 2018க்கும் இடைப்­பட்ட காலத்­தில் இந்­தக் குற்­றங்­களை இங் புரிந்­தார்.

அதன் பின்­னர் கிளே­னி­கல்ஸ் மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து அவர் பணி­நீக்­கம் செய்­யப்­பட்­டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மருத்­து­வ­மனை தரப்­பி­லி­ருந்து நோயா­ளி­க­ளுக்கு அதிக பணம் திருப்­பித் தரப்­பட்­ட­தாக கணக்­குத் தணிக்­கை­யா­ளர் கண்­ட­றிந்­த­தைத் தொடர்ந்து, இங்­கின் குற்­றங்­கள் வெளிச்­சத்­துக்கு வந்­தன. 2018 ஜன­வரி 12ஆம் தேதி இங் கைது செய்­யப்­பட்­டார்.

அவ­ரி­ட­மி­ருந்து கிட்­டத்­தட்ட $11,000 மீட்­கப்­பட்டு, கிளே­னி­கல்ஸ் மருத்­து­வ­ம­னை­யி­டம் ஒப்படைக்­கப்­பட்­டது. 2018 மார்ச் மாதம், மேலும் $48,000 பணத்தை இங் திருப்­பித் தந்­தார்.

இங்­கிற்கு $15,000 பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது. ஜூன் 7ஆம் தேதி அவர் தண்­ட­னையை நிறைவேற்றத் தொடங்­கு­வார்.