ஆஸ்திரேலிய இறைச்சிக் கூடத்திலிருந்து இறைச்சி இறக்குமதியை நிறுத்த உத்தரவு
ஆஸ்திரேலிய இறைச்சிக் கூடம் ஒன்றிலிருந்து (படம்) இறைச்சியை இங்கு இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ளுமாறு ஹலால் சான்றிதழ் வைத்திருக்கும் இறைச்சி விற்பனையாளர்களுக்கு சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) உத்தரவிட்டுள்ளது.
'தாமஸ் ஃபுட்ஸ் இன்டர்நேஷனல் லோபத்தல்' எனும் அந்த இறைச்சிக் கூடம், இறைச்சியின் ஹலால் தன்மையை விட்டுக்கொடுத்துவிட்டது என்பதை தீர்மானிக்க போதுமான ஆதாரங்களை தான் கண்டறிந்துள்ளதாக முயிஸ் நேற்று கூறியது. அப்படியென்றால், அந்த இறைச்சிக் கூடத்திலிருந்து கிடைக்கும் இறைச்சி ஹலால் கிடையாது. முஸ்லிம் சட்டத்தின்கீழ் அதைச் சாப்பிடக்கூடாது.
மேற்கூறப்பட்ட இறைச்சிக் கூடத்திலிருந்து இறைச்சியை இறக்குமதி செய்யும் ஹலால் சான்றிதழ் வைத்திருக்கும் இறைச்சி விற்பனையாளர்களுடன் தாம் தொடர்பில் இருப்பதாக முயிஸ் கூறியது. ஹலால் சான்று நடைமுறைக்கு உட்பட்ட விநியோகிப்பாளர்களிடம் இருந்து இறைச்சியைத் தருவிப்பதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட இறைச்சி விற்பனையாளர்களை முயிஸ் தொடர்புகொண்டு உள்ளது.
மானபங்கம் செய்தவருக்கு குறைந்தது 18 மாதச் சிறை விதிக்க வலியுறுத்து
குடும்ப நண்பரின் மகளை 2016ல் மானபங்கம் செய்த ஆடவர் ஒருவருக்கு குறைந்தது 18 மாதச் சிறைத் தண்டனை விதிக்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர் லீ ஸூ ஸாவ் நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். மானபங்கம் செய்யப்பட்டபோது அச்சிறுமிக்கு ஒன்பது வயது. அப்போது அவருக்கு சிறு வயது என்பதால் அந்த ஆடவர் செய்தது தவறு என்பது அவருக்குத் தெரியவில்லை.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாக்க அந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

