தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டியோ: வெறுப்பைத் தூண்டும் பேச்சை சிங்கப்பூர் பொறுத்துக்கொள்ளாது

2 mins read
326e8565-12d5-499b-acd1-733a379e17ca
-

சமய அடிப்­ப­டை­யில் வெறுப்­பைத் தூண்­டும் பேச்சை சிங்­கப்­பூர் ஒரு­போ­தும் பொறுத்­துக்­கொள்­ளாது என்று மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் கூறி­யி­ருக்­கி­றார்.

இணை­யத்­தின் வழி­யாக இத்­த­கைய பேச்­சு­கள் சிங்­கப்­பூரை எட்­டு­வ­தைத் தடுக்க முடி­யா­விட்­டா­லும் நேரில் இங்கு வந்து யாரும் இத்­த­கைய வெறுப்­பைத் தூண்­டும் உரையை நிகழ்த்­து­வதை அர­சாங்­கத்­தால் தடுக்க முடி­யும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

தீவி­ர­வா­தத்­தைத் தூண்­டும் சொல்­லாட்சி மிக்க பேச்­சு­க­ளுக்­குப் பின்­வி­ளை­வு­கள் உண்டு என்­ப­தைச் சுட்­டிய மூத்த அமைச்­சர், பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­த­லைச் சமா­ளிக்க சமூக அள­வி­லான முயற்­சி­களை மேற்­கொள்­வது முக்­கி­யம் என்று வலி­யு­றுத்­தி­னார்.

இளை­யர்­கள் நம்­ப­க­மான சம­யத் தலை­வர்­க­ளின் வழி­காட்­டு­தலை நாட­வேண்­டும் என்­றும் தீவி­ர­வா­தத்­தை­யும் சம­யங்­க­ளுக்கு இடையே வெறுப்­பை­யும் தூண்­டக்­கூ­டிய உரை­களை நிரா­க­ரிக்க வேண்­டும் என்­றும் திரு டியோ கேட்­டுக்­கொண்­டார்.

'ஆர்­ஆர்ஜி' எனும் சமய மறு­வாழ்­வுக் குழு ஏற்­பாடு செய்­தி­ருந்த மாநாட்­டில் காணொளி வழி­யாக உரை­யாற்­றிய அவர், இந்­தோ­னீ­சிய சமய போத­கர் அப்­துல் சோமாட் படு­பாரா தனது ஆத­ர­வா­ளர்­க­ளைச் சமூக ஊட­கங்­களில் சிங்­கப்­பூ­ருக்கு எதி­ரா­கத் தூண்­டி­விட்­ட­தைச் சுட்­டிக்­காட்­டி­னார்.

தீவி­ர­வா­தச் சித்­தாந்­தத்­தைப் பரப்­பும் வகை­யில் அமைந்­தி­ருந்த உரையை நிகழ்த்­தி­ய­தால் சோமாட்­சிங்­கப்­பூ­ருக்கு வர அனு­மதி மறுக்­கப்­பட்­டது.

மற்ற சம­யங்­கள்­மீது அவ­தூறு பரப்­பும் வகை­யி­லும் வெடி­குண்­டு­க­ளைக் கொண்டு தற்­கொ­லைத் தாக்­கு­த­லில் ஈடு­ப­டு­வதை அங்­கீ­க­ரிக்­கும் வித­மா­க­வும் சோமாட்­டின் உரை அமைந்­தி­ருந்­தது.

சிங்­கப்­பூர் இஸ்­லாத்­தின் மேல் வெறுப்­பைக் காட்­டு­வ­தாக சோமாட்­டும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­களும் முன்­வைக்­கும் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு

ஆதா­ரம் ஏதும் இல்லை என்­பதை மூத்த அமைச்­சர் எடுத்­துக்­கூ­றி­னார்.

கிறிஸ்­து­வம், இஸ்­லாம் என எந்­தச் சம­யத்­தின் போத­க­ராக இருந்­தா­லும் அவர் வெறுப்­பைத் தூண்­டும் உரையை நிகழ்த்­தி­னால் சிங்­கப்­பூர் அதை ஒரு­போ­தும் பொறுத்­துக்­கொள்­ளாது என்று கூறிய திரு டியோ, சோமாட்­டின் உரை­களை இணை­யத்­தில் கேட்ட 17 வயது சிங்­கப்­பூர் இளை­யர் தற்­கொ­லைத் தாக்­கு­தல்­கா­ரர்­கள் தியா­கி­கள் என்று நம்­பி­ய­தை­யும் 2020ஆம் ஆண்டு உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் தடுத்து வைக்­கப்­பட்­ட­தை­யும் குறிப்­பிட்­டார்.

சுய­மா­கவே தீவி­ர­வாத சித்­தாந்­தத்­தால் ஈர்க்­கப்­ப­டு­வோர் உள்­நாட்­டுப் பாது­காப்­புக்கு மிரட்­ட­லாக விளங்­கு­வ­தை­யும் மூத்த அமைச்­சர் டியோ சுட்­டி­னார்.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லின்­போ­தும் சமய மறு­வாழ்­வுக் குழு, இஸ்­லா­மிய சம­யக் கல்­வி­மான்­கள், சம­யக் கல்வி ஆசி­ரி­யர்­கள் ஆகி­யோரை ஒருங்­கி­ணைத்து அவர்­கள் மூலம் தீவிர சித்­தாந்­தத்­தில் ஆர்­வம்­காட்­டு­வோ­ருக்கு ஆலோ­சனை வழங்­கும் செய­லில் ஈடு­ப­டு­வதை அவர் பாராட்­டி­னார்.