ஜூன் 30லிருந்து மலேசியாவுக்கு சொகுசுக் கப்பல் பயணங்கள்

ஜூன் 30லிருந்து மலேசியாவுக்கு சொகுசுக் கப்பல் பயணங்கள்

1 mins read
a08eda45-4a5e-449c-96a8-1e2840c5d9f1
-

இம்­மா­தம் இறு­தி­யி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து மலே­சி­யா­வுக்­குச் சொகு­சுக் கப்­பல் பய­ணங்­களை ராயல் கெரீ­பி­யன் நிறு­வ­னம் தொடங்­கு­கிறது.

ராயல் கெரீ­பி­யன் சொகு­சுக் கப்­பல்­கள் பினாங்கு மற்­றும் கிள்­ளான் துறை­மு­கத்­துக்­குச் செல்­லும்.

இம்­மா­தம் 30ஆம் தேதி­யி­

லி­ருந்து தனது 'ஸ்பெக்ட்­ரம் ஆஃப் தி சீஸ்' சொகு­சுக் கப்­ப­லில் மூன்று மற்­றும் நான்கு இர­வுப் பய­ணங்­களை ராயல் கெரீ­பி­யன் வழங்­கும்.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்­தி­லி­ருந்து இங்­கி­ருந்து சொகு­சுக் கப்­பல்­கள் மற்ற நாடு­க­ளின் துறை­மு­கங்­க­ளுக்­குச் செல்ல அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

இம்­மா­தம் இறுதி தொடங்­கும் சொகு­சுக் கப்­பல் பய­ணத்­துக்­கான பய­ணச்­சீட்­டு­க­ளுக்­கான விற்­பனை நேற்று தொடங்­கி­யது.