எக்காலத்திற்கும் கைகொடுக்கும் நிதித் திட்டமிடல்

குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்

கடல்­து­றை­யில் பத்­தாண்டு கால­மா­கப் பொறி­யா­ளர் பணி­யில் இருந்த காயத்­திரி, சமு­தா­யத்­திற்கு வேறு வழி­யில் நன்மை அளிக்­கும் பணியில் ஈடுபட நினைத்­தார். கடல்­து­றை­யில் இருந்து விலகி நிதி ஆலோ­ச­கர் ஆனார் காயத்­திரி தேவி, 36.

இருப்­பி­னும், நிதி ஆலோ­ச­கர் பணியை இவர் தெரிவு செய்­வ­தற்கு வேறு ஒரு கார­ணமும் உண்டு. காயத்­திரி பிறந்­த­போதே அவ­ரின் தாயா­ருக்கு 'லுப்­பஸ்' என்­னும் அரிய வகை நோய் இருந்­தது.

அவ­ரது வயது அதி­க­ரிக்க, இந்­நோய் அவ­ரு­டைய உடல்­ந­லத்­தைச் சீர்­கு­லைத்­தது. மருத்­துவக் காப்­பு­று­தித் திட்­டம் இல்­லா­த­தால் மருந்து­களுக்­கும் சிகிச்­சை­

க­ளுக்­கும் பணம் அதிகம் செல­வா­னது.

வேலை­யி­டத்­தில் காயத்­தி­ரி­யின் தாயார் மயங்கி விழுந்­ததை அடுத்து அவ­ருக்கு ஓய்வு தேவை என்று கூறி, அவ­ரது 50வது வய­தில் வேலை­யி­லி­ருந்து கட்­டாய ஓய்வு­பெற வைத்­தது அவர் பணி­பு­ரிந்த நிறு­வனம். வேலை­யின்றி, முன்போல் சுறு­

சு­றுப்பாக இயங்க முடியாமல் இவர் தாயார் நொந்­து­போ­னார். தமது உடல்­ந­லம் ஒரு­பு­றம், மறுபுறம் போது­மான வரு­மா­னம் ஈட்­ட வேண்டிய நிலை. மன உளைச்­ச­லுக்கு ஆளா­னார் அவர்.

நீரி­ழிவு நோயா­லும் அவர் பாதிக்­கப்­பட்­டார். உடல்­ந­லப் பிரச்­சி­னை­க­ளு­டன் 25 ஆண்­டு­ காலம் போரா­டி­ய­பின் காயத்­திரிக்கு 25 வய­தான­போது அவர் தாயார் கால­மா­னார்.

காயத்­தி­ரி­யின் தாயார் தவ­றிய பிறகு அவ­ரது தந்தை இரண்டு வேலை­க­ளைச் செய்­தார்.

கிடங்­கில் பணி­பு­ரிந்­த­து­டன் வாடகை வாகனத்தையும் ஓட்­டி­வந்த அவர், போதுமான ஓய்­வின்றி ஒரு­நாள் வாகன விபத்­தில் சிக்­கி­னார். அந்த வி­பத்­தில் மற்­றொரு வாக­னத்­தில் இருந்­த­ ஒரு­வர் உயி­ரி­ழந்­தார்.

காயத்­தி­ரி­யின் தந்தை உயிர் பிழைத்­த­போ­தும் அச்­சம்­ப­வம் அவ­ரைப் பெரி­தும் பாதித்­தது. குற்ற உணர்ச்­சி­யால் மன அழுத்­தத்­துக்கு ஆளா­னார்.

இவ்­வாறு தந்தை அதி­க சிர­மங்­களுக்­கி­டையே குடும்­பத்­துக்­காக உழைத்­த­தைப் பார்த்து வளர்ந்­தார் காயத்­திரி. குடும்ப நிதி நிர்­வா­கம் தொடர்­பில் உத­வ­வேண்­டும் என்று தீர்­மா­னித்­தார்.

கடல்­து­றை­யி­லி­ருந்து வில­கிய காயத்திரி, பல வேலை­க­ளுக்கு விண்­ணப்­பித்­தார்.

அப்­போது காப்­பு­றுதி நிறு­வ­னம் ஒன்று அவ­ரை சந்­தித்­துப் பேச விரும்­பி­யது. நேர்கா­ண­லுக்கு காயத்­திரி சென்­ற­போது, அங்கு பணி­பு­ரி­யும் ஒரு­வர், தாம் பார்க்­கும் வேலை­யால் பல குடும்­பங்­கள் அடை யும் நன்­மை பற்றி பகிர்ந்­து­கொண்­டார்.

இறப்பு தொடர்­பான காப்­பு­று­தித் திட்டங்­க­ளின் வழி­யாக இறந்­த­வர் குடும்பத்­தார் சிறிது கால­மா­வது நிதிப் பிரச்­சினை­களைச் சமா­ளிக்க முடி­வது குறித்­தும் காயத்­தி­ரி­யு­டன் அந்த நண்­பர் பகிர்ந்­து­கொண்­டார்.

மக்­க­ளுக்கு உத­விக்­க­ரம் நீட்ட இது­வும் ஒருவழி­ என்­பதை காயத்­திரி உணர்ந்­தார். அது­வரை நிதி ஆலோ­ச­கர்­க­ளின்­மீது நம்­பிக்கை கொள்­ளாத காயத்­திரி, அதேபணி­யில் முழு நம்­பிக்­கை­யு­ட­னும் ஆர்­வத்­து­ட­னும் இறங்­கி­னார்.

தன்­னு­டைய குடும்­பத்­திற்கு ஏற்­பட்ட நிலைமை யாருக்­கும் ஏற்­ப­டக்­கூ­டாது என்­பதைக் குறிக்­கோ­ளா­கக் கொண்டு தின­மும் தன் பணி­யில் ஈடு­ப­டு­கி­றார்.

கடு­மை­யான நோய்­க­ளி­லி­ருந்து மக்­கள் முடிந்­த­ளவு தங்­க­ளைத் தற்­காத்­துக்­கொள்ள வேண்­டும் என்று வலி­யு­றுத்­தும் காயத்­திரி, தமது நிதி ஆலோ­ச­னைச் சேவை­களை நாடி வரு­வோ­ரு­டன் நம்­பிக்கை­அடிப்படையிலான நட்புறவைக் கொண்­டுள்­ளார்.

"நிதி தொடர்­பான திட்­ட­மி­டு­த­லில் இளை­யர்­கள் ஈடு­ப­டத் தயங்­கு­வ­தில்லை. ஆனால், நிதித் திட்­ட­மி­டு­தலின் முக்­கி­யத்­து­வம் குறித்துப் பேச, நம் இந்­திய சமூ­கத்­தைச் சேர்ந்த மூத்­தோர் பலர் விரும்­பு­வ­தில்லை. நிதி ஆலோ­ச­கர்­கள் செய்­வது ஏமாற்று வேலை­யல்ல என்­பதை அவர்­கள் உணர்ந்­தால் நிதி நிர்­வா­கம் தொடர்­பான முடி­வுகளை அவர்­கள் எடுப்­ப­தற்கு நாங்­கள் எளி­தில் உதவ முடி­யும்," என்­றார் காயத்­திரி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!