நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத் தலைவர் டிசம்பரில் பதவி ஓய்வு

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ('என்­டியு') தலை­வ­ரான 66 வயது பேரா­சி­ரி­யர் சுப்ரா சுரேஷ் (படம்), ஐந்­தாண்­டுப் பத­விக்­கா­லத்­துக்­குப் பிறகு வரும் டிசம்­பர் இறுதி­யில் பதவி ஓய்வு பெற­வி­ருக்­கி­றார்.

அடுத்த தலை­வரை அடை­யா­ளம்­கா­ணும் பொருட்டு குழு ஒன்று அமைக்­கப்­படும் என்று 'என்­டியு' நேற்று தெரி­வித்­தது.

உல­கெங்­கும் நீடிக்­கும் கிரு­மித்­தொற்­றின் தாக்­கத்­தால் முக்­கிய குடும்ப நிகழ்­வு­க­ளில்­கூட நெருங்­கிய உற­வி­னர்­கள் ஒன்­று­கூ­டு­வது சாத்­தி­ய­மில்­லா­மல் போய்­விட்­ட­தாக மாண­வர்­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் அனுப்­பிய மின்­னஞ்­ச­லில் பேரா­சி­யர் சுரேஷ் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்த ஆண்டு பிறக்­க­வி­ருக்­கும் முதல் பேரக்­கு­ழந்­தை­யு­டன் அரு­கில் இருந்து நேரம் செல­வி­டும் பேரா­வ­லில் தாமும் தமது துணை­வி­யார் மேரி­யும் முன்­னர் திட்­ட­மிட்­ட­தற்­கும் முன்­கூட்­டியே அமெ­ரிக்கா திரும்ப விரும்­பு­வ­தாக அவர் கூறி­னார்.

1991ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் நான்­கா­வது தலை­வர் பேரா­சி­ரி­யர் சுப்ரா சுரேஷ். பல்­க­லை­யின் கல்­வித்­து­றை­யில் ஆக உயர்ந்­த­தா­கக் கரு­தப்­படும் சிறப்­பு­மிக்க பல்­க­லைக்­க­ழ­கப் பேரா­சி­ரி­யர் எனும் பத­வியை வகித்த முதல் பேரா­சி­ரி­யர் என்ற சிறப்பு அவ­ரைச் சாரும்.

2013 முதல் 2017ஆம் ஆண்டு வரை அமெ­ரிக்­கா­வின் கார்­னெகி பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தலை­வ­ரா­கப் பணி­யாற்­றிய அவர் அதற்கு முன்­னர் அமெ­ரிக்­கா­வின் தேசிய அறி­வி­யல் அற­நி­று­வ­னத்­தின் இயக்­கு­ந­ராக அப்­போ­தைய அதி­பர் பராக் ஒபா­மா­வால் நிய­மிக்­கப்­பட்­டார். புகழ்­பெற்ற 'எம்­ஐடி' பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பொறி­யி­யல் கல்­லூ­ரித் தலை­வ­ரா­கப் பணி­யாற்­றிய அனு­ப­வ­மும் அவ­ருக்கு உண்டு.

'என்­டியு' சமூ­கத்­தி­ன­ருக்கு விடுத்த செய்­தி­யில், உல­கத்­த­ரம் வாய்ந்த முன்­னி­லைப் பல்­க­லைக்­க­ழ­கம் என்ற புரி­த­லோடு தாம் விடை­பெ­று­வ­தா­கக் கூறிய பேரா­சி­ரி­யர் சுரேஷ், அனை­வ­ரும் இணைந்து 'என்­டியு'வின் அடித்­தளத்தை வலுப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தா­க­வும் அடுத்த தலை­வர் அதனை மேலும் உயர்த்­து­வார் என்று நம்­பு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

பேரா­சி­ரி­யர் சுரே­ஷின் பங்­க­ளிப்­புக்கு நன்றி தெரி­வித்த 'என்­டியு'வின் அறங்­கா­வ­லர் வாரி­யத் தலை­வர் திரு­வாட்டி கோ சுவீ சென், இவ­ரது தலை­மைத்­து­வத்­தின்­கீழ் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பாடத்­திட்­டத்­தில் புத்­தாக்­கம், மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பம் போன்­றவை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­து­டன் மாண­வர்­க­ளுக்­குத் தர­மான கல்வி வழங்­கப்­பட்­ட­தா­கக் கூறி­னார்.

2020ல் கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லின்­போது 'என்­டியு பிரை­யா­ரிட்­டிஸ் ஃபண்ட்' அற­நி­திக்கு பேரா­சி­ரி­யர் சுரே­ஷும் அவ­ரது துணை­வி­யா­ரும் தனிப்­பட்ட முறை­யில் 100,000 வெள்ளி நன்­கொடை வழங்­கி­னர்.

தமது பணிக்­கா­லத்­தில் 'என்­டியு' ஆய்­வா­ளர்­க­ளு­டன் இணைந்து உல­க­ளா­விய சஞ்­சி­கை­களில் சில ஆய்­வுக்­கட்­டு­ரை­க­ளை­யும் வெளி­யிட்­டுள்­ளார்.

அவ­ருக்கு வழங்­கப்­பட்ட மொத்­தம் 19 கௌரவ டாக்­டர் பட்­டங்­களில் ஏழு 'என்­டியு' தலை­வ­ரா­கப் பணி­யாற்­றிய கால­கட்­டத்­தில் வழங்­கப்­பட்­டவை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!