பாலியல் கொடுமையிலிருந்து காப்பாற்றியவருக்கு விருது

பாலியல் கொடுமையிலிருந்து காப்பாற்றியவருக்கு விருது

1 mins read
34c5bd2a-9f69-4a05-9790-6e522fa164b5
-

உலு பாண்­டான் பூங்கா இணைப்புப் பகு­தி­யில் சென்ற பிப்­ர­வரி 2ஆம் தேதி தனது தோழி­யு­டன் உண­வ­ருந்­தச் சென்ற விநோத் ராஜேந்­தி­ர­னுக்கு (படம்) அது ஒரு சாகச நாளாக அமைந்­தது.

பின்­னி­ர­வில் அவ­ரும் அவ­ரது தோழி ரமிஸா பானு அப்­துல் ரகு­மா­னும் உதவி கேட்டு அல­றிய பெண்­ணின் குர­லைக் கேட்­ட­தும் விரைந்து செயல்­பட்­ட­னர்.

மாது ஒரு­வ­ரைப் பாலி­யல் கொடுமை செய்த ஆட­வர் இவர்­க­ளைக் கண்­ட­தும் தப்­பி­யோ­டி­னார்.

விடா­மல் துரத்­திச் சென்ற விநோத் ஆட­வரை மடக்­கிப் பிடித்த வேளை­யில் திரு­வாட்டி பானு காவல்­து­றை­யி­ன­ரைத் தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்­டார்.

சம்­பவ இடத்­துக்­குச் சென்ற காவல்­து­றை­யினர் பாலி­யல் கொடுமை செய்த ஆட­வ­ரைக் கைது செய்­த­னர்.

தாங்­கள் வரா­விட்­டால் நிலைமை விப­ரீ­த­மாகி இருக்­கும் என்று அழு­த­படி அந்த மாது கூறி­யதை விநோத் நினை­வு­கூர்ந்­தார்.

பொது உணர்­வுக்­கான விரு­து­க­ளுக்­குத் தெரிந்­தெ­டுக்­கப்­பட்ட ஆறு பேரில் திரு விநோத்­தும் திரு­வாட்டி பானு­வும் அடங்­கு­வர்.

பொதுப் பாது­காப்­புக்­குப் பங்­க­ளித்­த­மைக்­காக சிங்­கப்­பூர்க் காவல்­துறை இந்த விருதை வழங்­கிக் கௌர­வித்­தது. கடை­யில் திரு­டிய ஆட­வ­ரைப் பிடித்­துக் கொடுத்த ஒரு­வ­ருக்­கும், குற்­றச்­செ­யல்­க­ளைத் தடுப்­ப­தில் துணை­பு­ரிந்த மூன்று அமைப்­பு­க­ளுக்­கும் நேற்­றைய விருது நிகழ்ச்­சி­யில் காவல்­துறை விரு­து­களை வழங்­கி­யது.