ஆசிய கலாசார அரும்பொருளகத்தின் நூலுக்கு துணைப் பிரதமர் பாராட்டு

ஆசிய கலா­சார அரும்­பொ­ரு­ள­கம் வெளி­யிட்­டுள்ள கலா­சார முக்­கி­யத்­து­வம் வாய்ந்த 100 பொருள்­களின் படங்­க­ளைக் கொண்­டுள்ள நூலில் காணப்­படும் பொருள்­கள் பல்­வேறு கலா­சா­ரங்­க­ளின் தாக்­கத்­தை­யும் வலி­மை­யை­யும் சித்­தி­ரிப்­ப­தா­கத் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் கூறி­யி­ருக்­கி­றார்.

உல­கில் பிரி­வி­னை­கள் அதி­க­ரிக்­கும் கால­கட்­டத்­தில் இத்­த­கைய படங்­கள் கூடு­தல் மதிப்­பைப் பெறு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இந்­தத் தலை­சி­றந்த கலைப்­படைப்­பு­கள் பிரம்­மாண்­ட­மா­னவை என்­றா­லும் அழ­கால் மட்­டுமே இவை மதிக்­கப்­ப­டு­வ­தில்லை. தொடர்பு, வெளிப்­ப­டைத்­தன்மை ஆகி­ய­வற்­றின் வலி­மையை உணர்த்த உத­வு­வ­தால்­தான் இவை முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றன என்­றார் திரு ஹெங்.

நூலில் இடம்­பெ­றும் சில கலைப்­ப­டைப்­பு­களை அவர் எடுத்­து­ரைத்­தார்.

18ஆம் நூற்­றாண்­டில் ஐரோப்­பா­வில் செய்­யப்­பட்ட குதிரை வடி­வி­லான ஊது­வத்தி ஏற்­றி­வைக்­கும் சிறிய மாடம் அதில் ஒன்று.

உல­கின் பல பாகங்­களில் இருந்து சேக­ரிக்­கப்­பட்ட பொருள்­களைக் கொண்டு செய்­யப்­பட்ட கலைப்­ப­டைப்பு இது.

சீனப் பீங்­கான், ஜப்­பா­னிய அரக்கு, ஐரோப்­பிய வெண்­க­லம், செம்­ப­வ­ளப் பாறை போன்­ற­வற்­றைக் கொண்டு அந்த ஊது­வத்தி மாடம் செய்­யப்­பட்­ட­தைத் துணைப் பிர­த­மர் சுட்­டி­னார்.

இந்­தக் கலைப்­ப­டைப்­பு­கள் அனைத்­தும் வெளிப்­ப­டைத்­தன்­மை­யின் முக்­கி­யத்­து­வத்தை சரி­யான நேரத்­தில் நினை­வூட்­டும் பொருத்­த­மான அம்­சங்­கள் என்­றார் அவர்.

வெவ்­வேறு கலா­சா­ரங்­க­ளின் பாரம்­ப­ரி­யங்­கள், மர­பு­டைமை ஆகி­யவை குறித்த ஆழ­மான புரி­த­லுக்கு இது உத­வு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

தேசிய நூல­கத்­தில் நடை­பெற்ற சிங்­கப்­பூர் புத்­த­கக் கண்­காட்சி 2022ல் ஆசிய கலா­சார அரும்­பொரு­ள­கத்­தின் 100 தலை­சி­றந்த கலைப்­ப­டைப்­பு­கள் எனும் நூல் வெளி­யீட்டு விழா­வில் திரு ஹெங் உரை­யாற்­றி­னார்.

'எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்­டின்' சீன ஊட­கக் குழு ஏற்­பாடு செய்­துள்ள இந்­தப் புத்­த­கக் கண்­காட்சி இம்­மா­தம் 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடை­பெ­றும்.

சிங்­கப்­பூர் பல இன, பல கலா­சார, பல சமய சமு­தா­ய­மாக விளங்கு­வ­தால் வேற்­று­மை­யும் வெளிப்­ப­டைத்­தன்­மை­யும் இதன் முக்­கிய விழு­மி­யங்­க­ளாக விளங்­கு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­கள் தளர்த்­தப்­பட்­டி­ருப்­ப­தால் சிங்­கப்­பூ­ரர்­கள் அரும்­பொருளகங்­க­ளுக்­குச் சென்று அங்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்­கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­லாம் என்று திரு ஹெங் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரின் மர­பு­டைமை, வர­லாறு ஆகி­ய­வற்­றைப் புரிந்­து­கொள்­ள­வும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு இடை­யி­லான பொது­வான அம்­சங்­களை இந்த வட்­டா­ரம், அதற்­கப்­பால் உல­கம் முழு­வ­தும் விரிவு­படுத்­த­வும் இது உத­வும் என்­றார் அவர்.

சீன மொழி­யில் எழு­தப்­பட்­டி­ருக்­கும் இந்த நூல் ஐந்து பாகங்­க­ளைக் கொண்­டது. இவை சம­யம், அன்பு, அழகு, தூய்மை, நம்­பிக்கை ஆகிய கருப்­பொ­ருள்­களில் அமைந்­துள்­ளன.

ஆர்­வ­முள்­ள­வர்­கள், புத்­த­கக் கண்­காட்சி அல்­லது 'யூனி­யன் புக்' இணை­யத்­த­ளத்­தில் 38 வெள்­ளிக்கு இந்த நூலை வாங்­கிக்­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!