ஆசி­யா­வின் ஆகப் பெரிய செயற்கை கோழி இறைச்சி உற்­பத்தி தொழிற்­சாலை 2023ல் திறக்­கப்­படும்

செயற்கை கோழி இறைச்­சி­யைத் தயா­ரிக்­கும் ஆசி­யா­வின் ஆகப் பெரிய தொழிற்­சாலை பிடோக் வட்­டா­ரத்­தில் அடுத்­தாண்டு கட்டி முடிக்­கப்­பட உள்­ளது. அதற்­கான அடிக்­கல் நாட்­டும் நிகழ்ச்சி நேற்று இடம்­பெற்­றது.

அமெ­ரிக்­கா­வின் கலி­ஃபோர்­னி­யா­வைத் தள­மா­கக் கொண்ட ஈட் ஜஸ்ட் நிறு­வ­னத்­தின் பிரி­வான குட் மீட், 30,000 சதுர அடி பரப்­ப­ள­வில் ஆலை­யைக் கட்­ட­வுள்­ளது. இது ஒரு காற்­பந்து திட­லில் பாதி­யா­கும்.

இந்­நி­று­வ­னம் விலங்­கு­க­ளின் உயி­ர­ணுக்­களைக் கொண்டு தயா­ரித்த கோழி இறைச்­சியை இங்கு விற்க சிங்­கப்­பூர் உணவு அமைப்பு கடந்த டிசம்­பர் மாதம் அனு­மதி வழங்­கி­யது.

உயி­ர­ணுக்­க­ளைக் கொண்டு உற்­பத்தி செய்­யப்­படும் செயற்கை இறைச்­சியை விற்க அனு­மதி வழங்­கிய முதல் நாடு சிங்­கப்­பூர் ஆகும்.

உயி­ர­ணுக்­க­ளைப் பிரித்து எடுத்து அதை உயி­ரி­யல் உலை­யில் வளர்த்து செயற்­கைக் கோழி இறைச்சி உற்­பத்தி செய்­யப்­ப­டு­கிறது. இதில் கோழி­யைக் கொல்­வ­தற்­குத் தேவை இல்லை.

$61 மில்­லி­யன் செல­வில் கட்­டப்­படும் குட் மீட்­டின் தொழிற்­சாலை அடுத்த ஆண்டு முதல் காலாண்­டுக்­குள் கட்­டி­மு­டிக்­கப்­படும்.

நிறு­வ­னத்­தின் இரண்­டா­வது பெரிய தொழிற்­சா­லை­யாக இது இருக்­கும்.

அதில் 6,000 லிட்­டர் கொள்­­அளவு கொண்ட உயி­ரி­யல் உலை அமைக்­கப்­படும்.

செயற்கை இறைச்­சித் தொழில்­து­றை­யில் அமைக்­கப்­படும் ஆகப் பெரிய உயி­ரி­யல் உலை இது.

ஒவ்­வோர் ஆண்­டும் பத்­தா­யி­ரம் கிலோ செயற்கை கோழி இறைச்­சியை அது தயா­ரிக்­கும். தொழிற்­சா­லை­யில் 50 ஆய்­வா­ளர்­கள் பணி­யாற்றுவார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!