நிக்கல் நெடுஞ்சாலை விபத்து: குடிபோதையில் இருந்ததாக ஓட்டுநர் கைது

1 mins read
c2063e10-4e47-424d-af68-1035c3dd3728
படம்: எஸ்ஜி ரோட் விஜிலாண்டே/ஃபேஸ்புக் -

நிக்­கல் நெடுஞ்­சா­லை­யில் கடந்த 4ஆம் தேதி­யன்று நடந்த விபத்­தில் சிக்­கிய மூன்று மிதி­வண்டி ஓட்­டி­கள், டான் டோக் செங் மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்­பட்­டதை அடுத்து, அவர்­களில் இரு­வர் வீட்­டுக்கு அனுப்­பப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் எஞ்­சி­ய­வர் தீவிர சிகிச்­சைப் பிரி­வி­லி­ருந்து வெளி­யே­றி­விட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

விபத்து நடந்­த­போது 14 பேர் தங்­க­ளின் மிதி­வண்­டி­களில் கும்­ப­லா­கச் சாலை­யில் சென்­று­கொண்­டி­ருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பின்­னி­ரவு 2 மணி­ய­ள­வில் நடந்­த­தா­கக் கூறப்­படும் இந்த விபத்து தொடர்­பில் 39 வயது வாக­ன ஓட்­டு­நர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

கில்­லிமார்ட் ரோட்டை நோக்­கிச் செல்­லும் சாலைப் பகு­தி­யில் விபத்து நடந்­த­தா­க­வும் அப்­போது வாக­னம் ஓட்­டிச் சென்ற அந்த ஆட­வர், குடி­போ­தை­யில் இருந்­த­தா­க­வும் காவல் துறை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர். இது தொடர்பாக விசா­ரணை நடந்­து­வ­ரு­கிறது.

விபத்­தில் சிக்­கிய மூன்று மிதி­வண்டி ஓட்­டி­களில் ஒரு­வர் பெண். அவ­ருக்கு 47 வயது என்று அறி­யப்­ப­டு­கிறது. மற்ற இரு ஆண்­களும் 47, 48 வயது­­உடை­வர்­கள் என்று அதி­கா­ரி­கள் கூறி­னர்.

மருத்­துவ அதி­கா­ரி­கள் வந்த சம­யத்­தில் மூவ­ரும் சுய­நி­னை­வு­டன் இருந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

விபத்­தில் சிக்­கி­ய­வர்­களில் ஒரு­வர் கீழே படுத்­தி­ருந்­த­தா­க­வும் மற்ற இரு­வர் நொண்­டிக்­கொண்டு இருந்­த­தா­க­வும் மிதி­வண்­டிக் கும்­ப­லைச் சேர்ந்த திரு ரோனி ஃபைசால் டான், 54, குறிப்­பிட்­டார். தமக்­குப் பின்­னால்­தான் அந்த மூவ­ரும் மிதி­வண்டி ஓட்டி வந்­த­தா­க­வும் அவர் குறிப்பிட்டார்.