இந்த ஆண்டு ஜனவரி முதல் பார்சல் விநியோகம் சம்பந்தப்பட்ட போலி மோசடிகளில் குறைந்தபட்சம் 415 பேர் $574,000 தொகையை இழந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்தது.
பார்சல் வந்திருக்கிறது என்றும் அதைப் பெற்றுக் கொள்ளுமாறும் மின்னஞ்சல் மூலம் அல்லது குறுஞ்செய்தி வழி மோசடிப் பேர்வழிகள் தகவல் அனுப்புவர்.
அச்செய்தியில் உள்ள இணைப்பில் சென்று விவரங்களைத் தெரிந்து கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொள்வர்.
அதை நம்பி செயல்படும் அப்பாவிகள் தங்களுடைய விவரங்களைத் தெரிவித்து கடைசியில் பணத்தை இழந்து ஏமாந்துவிடுவார்கள் என்று அறிவுறுத்திய காவல்துறை, எச்சரிக்கையாக இருந்துகொள்ளும்படி மக்களை வலியுறுத்தியது.

