விடுப்பில் பிரதமர் லீ: தற்காலிகப் பிரதமராக லாரன்ஸ் வோங்

விடுப்பில் பிரதமர் லீ: தற்காலிகப் பிரதமராக லாரன்ஸ் வோங்

1 mins read
401cb759-2194-4c21-bc9f-e71aa003676d
படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பிரதமர் லீ சியன் லூங், நாளை முதல் (ஜூன் 13) அடுத்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) வரை விடுப்பில் செல்கிறார். பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தது.

திரு லீ விடுப்பில் இருக்கும்போது, துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தற்காலிகப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதியமைச்சரான திரு லாரன்ஸ் வோங் சென்ற திங்கள்கிழமையன்று (ஜூன் 6) துணைப் பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.