தற்காப்பு அமைச்சர்கள் எழுவருடன் பிரதமர் சந்திப்பு

தற்காப்பு அமைச்சர்கள் எழுவருடன் பிரதமர் சந்திப்பு

2 mins read
9de9dc0e-f939-49b1-a1de-31104bbffe15
-

அமெ­ரிக்கா, இந்­தோ­னீ­சியா, மலே­சியா, ஆஸ்­தி­ரே­லியா, பிரான்ஸ், சீனா, கத்­தார் ஆகிய நாடு­க­ளின் தற்­காப்பு அமைச்­சர்­களை பிர­த­மர் லீ சியன் லூங் சந்­தித்­துப் பேசி­னார். இந்­தச் சந்­திப்பு நேற்றும் சனிக்கிழமையும் இஸ்­தா­னா­வில் நடை­பெற்­றது.

சிங்­கப்­பூ­ரில் நேற்று வரை நடை­பெற்ற ஷங்­ரிலா கலந்­து­ரை­யா­டல் கூட்­டத்­தில் பங்­கேற்க வந்­தி­ருந்த வேளை­யில், இந்த நாடு­க­ளின் தற்காப்பு அமைச்­சர்­கள் திரு லீயைச் சந்­தித்­த­னர்.

அமெ­ரிக்க தற்காப்பு அமைச் சர் லாயிட் ஆஸ்­டி­னு­டன், உலக வளர்ச்சி மற்­றும் பாது­காப்­புப் பிரச்­சி­னை­கள் குறித்து பிர­த­மர் லீ விவா­தித்­தார்.

மேலும், சிங்­கப்­பூ­ருக்­கும் அமெ­ரிக்­கா­வுக்­கும் இடை­யி­லான நீண்­ட­கால இரு­த­ரப்பு தற்­காப்பு உற­வு­களை இரு­வ­ரும் மறு­உ­று­திப்­ப­டுத்­தி­ய­தாக சிங்­கப்­பூர் தற்­காப்பு அமைச்சு கூறி­யது.

பயங்­க­ர­வாத முறி­ய­டிப்பு மற்­றும் உயிர்­ம­ருத்­து­வம் ஆகிய புதிய அம்­சங்­களில் இரு நாடு­க­ளின் உறவு விரி­வ­டைந்­தி­ருப்­பதை திரு ஆஸ்­டின் உறு­தி­செய்­த­தா­க­வும் அமைச்சு தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

இந்­தோ­னீ­சியாவின் தற்காப்பு அமைச்­சர் பிர­போவோ சுபி­யான்­டோ­வு­ட­னான சந்­திப்­பின்­போது சிங்­கப்­பூர், இந்­தோ­னீ­சியா இடை­யி­லான மக்­க­ளோடு மக்­கள் உறவு மறு­உ­று­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

உண­வுப் பாது­காப்பு, கடல்­துறை மற்­றும் பயங்­க­ர­வாத முறி­ய­டிப்பு குறித்­தும் திரு லீயும் திரு பிரோ­போ­வும் விவா­தித்­த­னர்.

மலே­சியா தற்­காப்பு அமைச்­சர் ஹிஷா­மு­தின் ஹுசே­னும் திரு லீயும் சந்­தித்­த­போது, கடல்­துறை பாது­காப்பு, இணை­யப் பாது­காப்பு, பயங்­க­ர­வாத முறி­ய­டிப்பு போன்­றவை தொடர்­பாக இந்த வட்­டா­ரத்­தில் பொது­வா­கக் காணப்­படும் சவால்­கள் குறித்து இரு­வ­ரும் விவா­தித்­த­னர்.

அந்த அமைச்­சர்­க­ளு­ட­னான சந்­திப்­பு­கள் குறித்து பிர­த­மர் லீ தமது ஃபேஸ்புக் பதி­வில் மகிழ்ச்சி தெரி­வித்­துள்­ளார்.

"கடந்த சில தினங்­க­ளாக பல்­வேறு தற்­காப்பு அமைச்­சர்­கள் மற்­றும் ராணு­வத் தலை­வர்­க­ளைச் சந்­தித்­தேன். அந்­தந்த நாடு­க­ளு­டன் சிங்­கப்­பூர் கொண்­டி­ருக்­கும் வலு­வான உற­வு­களை மறு­உ­று­திப்­ப­டுத்­த­வும் கருத்­து­க­ளைப் பரி­மா­றிக்­கொள்­ள­வும் இந்­தச் சந்­திப்பு­கள் நல்­வாய்ப்­பாக அமைந்­தன," என்று திரு லீ குறிப்­பிட்­டுள்­ளார்.