இளையர் விழாவில் அதிபர் சவால் நிதிக்கு $250,000

இளையர் விழாவில் அதிபர் சவால் நிதிக்கு $250,000

2 mins read
0548c68b-c9f6-4d43-ba87-b69b82dc7bc1
-

பூன் லே சமூக நிலை­யத்­தில் நேற்று அக்­கம்­பக்க குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­க­ளைச் சேர்ந்த 75 குழந்­தை­களும் 50 இளம் தொண்­டூ­ழி­யர்­களும் பல்­வேறு விளை­யாட்­டு­களில் ஈடு­பட்­ட­னர்.

'கம்­யூ­னிட்டி யூத்­கேர் ஃபெஸ்டி­வல்' எனப்­படும் இளை­யர் கேளிக்கை விழா­வில் கலந்­து­கொண்ட அவர்­கள், பல்­வேறு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­னர்.

வாச­னைத் திர­வி­யம் தயா­ரித்­தல், கேளிக்கை விளை­யாட்­டு­களில் ஈடு­ப­டு­தல், காற்­பந்து விளை­யா­டு­தல் போன்­றவை அந்த நட­வ­டிக்­கை­கள்.

மக்­கள் கழ­கத்­தின் இளை­யர் இயக்கம் ஏற்­பாடு செய்த இந்த கேளிக்கை விழா கடந்த மூன்று மாத­மாக நடை­பெற்று வந்­தது. நேற்­றைய இறு­தி­நா­ளில் அதி­பர் ஹலிமா யாகோப் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

தேசிய வளர்ச்சி அமைச்­ச­ரும் பூன் லே அடித்­தள அமைப்­பு­க­ளின் ஆலோ­ச­க­ரு­மான டெஸ்­மண்ட் லீயும் நிகழ்­வில் பங்­கேற்­றார். பதின்ம வய­தி­ன­ருக்­கான மன­ந­லப் பயி­ல­ரங்­கி­லும் இவர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

அதி­பர் சவால் நிதிக்­காக மக்­கள் கழ­கம் சார்­பில் $250,000க்கான காசோலை அதி­பர் ஹலி­மா­வி­டம் வழங்­கப்­பட்­டது. குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­களை ஆத­ரிக்­கும் நோக்­கம் கொண்­டது அதி­பர் சவால் நிதி.

அதே­போல, மக்­கள் கழ­கத்­தின் இளை­யர் இயக்­கம், குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்­காக கல்­வித் திட்­டங்­க­ளை­யும் மன­ந­லத் திட்­டங்­க­ளை­யும் வாரந்­தோ­றும் நடத்­து­கிறது.

2018ஆம் ஆண்டு முதல் பூன் லே வட்­டா­ரத்­தைச் சேர்ந்த 96 குடும்­பங்­க­ளின் 180க்கும் மேற்­பட்ட குழந்­தை­கள் இந்­தத் திட்­டங்­கள் மூலம் பய­ன­டைந்­துள்­ள­னர்.

குறிப்­பாக 5 வயது முதல் 18 வயது வரை­யி­லான பிள்­ளை

­க­ளுக்கு நடத்­தப்­படும் கல்­வித் திட்­டங்­கள் தமது குடும்­பத்­திற்கு உதவி­ய­தாக திரு­வாட்டி மர்னி, 40, என்­னும் இல்­லத்­த­ரசி கூறி­னார். கொள்ளை நோய் காலத்­தில் மெய்­நி­கர் வாயிலாக­வும் இந்­தக் கல்­வித் திட்­டங்கள் தொடர்ந்­ததை அவர் சுட்­டி­னார்.

பூன் லே வட்­டா­ரத்­தில் ஈரறை வாடகை வீட்­டில் வசிக்­கி­றார் இவர்.