நாளை விடைபெறும் கட்டுப்பாடு:
இரவுநேர வர்த்தகர்கள் வரவேற்பு
இரவுநேர பொழுதுபோக்குக்கூடங்களுக்குச் செல்ல நாளை (ஜூன் 14) முதல் ஏஆர்டி பரிசோதனை செய்யத் தேவை இல்லை. கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சு வெளி யிட்ட இந்த அறிவிப்பு பொழுதுபோக்கு ஆர்வலர்கள் பலரை யும் கவர்ந்துள்ளது. வர்த்தகம் வழக்கநிலைக்குத் திரும்பு வதை எதிர்பார்த்திருக்கும் தமது சங்கத்தின் உறுப்பினர்கள் இந்த அறிவிப்பைப் பெரிதும் வரவேற்றுள்ளதாக சிங்கப்பூர் இரவுநேர பொழுதுபோக்கு வர்த்தகச் சங்கத்தின் தலைவர் நேசன் தியாகராஜன் கூறினார். பொழுதுபோக்குக் கூடத்திற் குள் நுழையும் ஒவ்வொரு முறையும் ஏஆர்டி பரிசோதனைக் காக $12 செலவிட வேண்டி இருந்ததாகவும் இனி அந்தத் தொகை மிச்சப்படும் என்றும் மார்க்கஸ் டியோ என்னும் வாடிக்கையாளர் கூறினார்.
கோழி விநியோகத் தடை நீடித்தால் அரசாங்கம் உதவும்: கிரேஸ் ஃபூ
கோழி இறைச்சி விநியோக இடையூறு நீண்டகாலத்திற்கு நீடிக்குமாயின், பாதிக்கப்படும் வர்த்தகர்களுக்கும் கடைக்
காரர்களுக்கும் அரசாங்கம் உதவும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார். கோழி ஏற்றுமதிக்கு மலேசியா விதித்திருக்கும் தடை இங்குள்ள வர்த்தகங்களை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை அறிந்துள்ள அரசாங்கம், அதுபற்றி அணுக்கமாகக் கவனித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தேவை ஏற்படும்பட்சத்தில் அரசாங்கம் உதவிக்கரம் நீட்டும் என்றார்.
கோழி தட்டுப்பாடு காரணமாகவும் விநியோகத்தையும் விலையையும் நிலைப்படுத்தும் நோக்கத்துடனும் ஜூன் 1 முதல் கோழி ஏற்றுமதியை மலேசியா தடை செய்தது. சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் கோழி இறைச்சியில் மூன்றில் ஒரு பங்கு மலேசியாவில் இருந்து வந்துகொண்டிருந்தது.
சனிக்கிழமை மாலை செந்தோசாவில் நடைபெற்ற சிங்கப்பூர் இறைச்சி வர்த்தகர் சங்க விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய திருவாட்டி ஃபூ, தடையின் தாக்கம் பற்றி பேசினார்.
கோழி இறைச்சி விநியோகப் பிரச்சினை தொடர்ந்து நீடிக்குமாயின், தேசிய சுற்றுப்புற வாரியமும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் நிலைமையை ஆராய்ந்து, உதவி தேவைப்படும் வர்த்தகங்களுக்கும் கடைக்காரர்களுக்கும் ஆதரவு வழங்கும் என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு கொவிட்-19 கொள்ளைநோய் ஜூரோங் மீன்பிடித் துறைமுகப் பணிகளில் இடையூறு ஏற்படுத்திய போது அரசாங்கம் உதவ முன்வந்ததை அவர் உதாரண மாகச் சுட்டினார். பாதிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு வாடகைக் கழிவு அல்லது வாடகைக் குறைப்பு அறி விக்கப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியாயின.
சிங்கப்பூரிடம் பொருளியல்
உதவி கோரிய இலங்கை
இலங்கை தனது பொருளியல் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு, முதலீடுகள், ஏற்றுமதி வாய்ப்புகள், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் சிங்கப்பூரின் உதவியை கோரியுள்ளது. இம்மாதம் 8, 9 தேதிகளில் சிங்கப்பூருக்கு இருநாள் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்ட இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் இந்த உதவியைக் கோரியதாக நம்பப்படுகிறது.
இலங்கை பொருளியல் நெருக்கடி பற்றி விளக்கமளித்த அவர், அதைச் சமாளிக்க சிங்கப்பூர் அரசாங்கத்திடம் தற்காலிக நிதி உதவியைக் கோரினார் என்று இலங்கை ஊடகங்கள் தெரிவித்தன. இலங்கையில் நேரடி முதலீடுகளையும், அந்நாட்டின் ஏற்றுமதிகளுக்கான வாய்ப்புகளையும் சிங்கப்பூர் அதிகரிப்பதோடு இலங்கைவாசிகளுக்கு அதிக வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தர சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆதரவை திரு பெரீஸ் கோரினார் என்று கூறப்பட்டது.
வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில் அவர் சிங்கப்பூர் வந்திருந்தார்.
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஒருவர் சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருப்பது நான்கு ஆண்டு களுக்குப் பின் இதுவே முதல்முறை. கொவிட்-19 பரவலின்போது இலங்கைக்குத் தேவையான மருத்துவப் பொருள் களையும் சாதனங்களையும் வழங்கியதற்காக
சிங்கப்பூருக்கு திரு பெரீஸ் நன்றி தெரிவித்தார்.

