சிங்கப்பூரில், மருந்துமூலம் நோய் தணிப்பு சிகிச்சை அளிக்கக்கூடிய 'கீமோதெரபி' தேவைப்படும் புற்று
நோயாளிகள், பக்கவிளைவுகள் குறைந்த, ஆற்றல்மிக்க சிகிச்சையை இனி பெறமுடியும். இதற்கு செயற்கை நுண்ணறிவு உதவும். 'கியூரேட்.ஏஐ' என்னும் தொழில்நுட்பம், 'கீமோதெரபி' சிகிச்சை காலம் முழுவதும் தேவைப்படும் மருந்தின் அளவை பரிந்துரைக்கிறது. இதன் மூலம் பக்கவிளைவு குறைவதோடு, சிகிச்சையின் பலன் அதிகரிக்கிறது.
இது குறித்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் உயிர்மருத்துவப் பொறியியல் துறைத் தலைவர் பேராசிரியர் டீன் ஹோ விளக்கினார்.
"பொதுவாக 'கீமோதெரபி' சிகிச் சைக்கு, நிர்ணயிக்கப்பட்ட நிலையான அளவிலேயே மருந்துகள் வழங்கப்படுகின்றன. பக்கவிளைவு ஏற்பட்டால் அதற்கேற்ப அந்த அளவில் மாற்றம் செய்யப்படுகிறது.
"இதனால் நோயாளிகளுக்குப் பெரிதாகப் பலன் கிட்டாமல்போகலாம். அதற்குப் பதிலாக, தனிப்
பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலான மருந்துகளை வழங்குவதன் மூலம் சிகிச்சையின் ஆற்றலை அதிகரிக்கலாம்," என்றார் அவர்.

