பிரதமர் லீ சியன் லூங் ஒரு வார விடுப்பில் செல்வதால் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தற்காலிகப் பிரதமராகச் செயல்படுவார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இன்று (ஜூன் 13) முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பிரதமர் லீ விடுப்பில் இருப்பார்.
நிதி அமைச்சராக இருந்த திரு வோங், துணைப் பிரதமராகப் பதவி உயர்வு பெறுவதாகக் கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றங்களின் ஒருபகுதியாக இவரது நியமனம் இடம்பெற்றது.
பிரதமர் விடுப்பில் செல்லும்போது திரு வோங் தற்காலிகப் பிரதமராகச் செயல்படுவார் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.
மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைத் தலை வராக கடந்த ஏப்ரல் மாதம் திரு வோங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் ஆவதற்கான சாத்தியத்தை இந்த நியமனம் அவருக்கு வழங்கக் கூடும்.

