கட்டுப்பாடு தளர்வுக்காகக் காத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

கட்டுப்பாடு தளர்வுக்காகக் காத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

2 mins read
3076741a-d4d6-4568-a3e5-5f1c2d491317
-

கொள்­ளை­நோய் பர­வல் கார­ண­மாக தங்­கு­வி­டு­தி­யி­லி­ருந்து வெளி­யேற வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­குக் கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டது.

பொது இடங்­க­ளுக்­குச் செல்­ல­வேண்­டிய அவ­சி­யம் உள்ள ஊழி­யர்­கள் அதற்­கான அனு­மதி அட்டை பெற­வேண்­டும். வெளியே சென்­றால் இவ்­வ­ளவு நேரத்­திற்­குள் திரும்­ப­வேண்­டும் என்­ப­து­போன்ற நடை­மு­றை­களை அவர்­க­ள் பின்­பற்ற வேண்­டும்.

அண்­மைக் கால­மாக கட்­டுப்­பாடு தளர்­வு­கள் படிப்­ப­டி­யாக அறி­விக்­கப்­பட்டு வரு­வ­தன் ஒரு­ப­கு­தி­யாக, ஜூன் 24 முதல் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பொது இடங்­க­ளுக்­குச் செல்­வ­தற்­கான கட்­டுப்­பாடு தளர்த்­தப்­ப­டு­கிறது. தளர்த்­தப்­பட்ட பின்­னர், பொது இடங்­க­ளுக்­குச் செல்ல அவர்­கள் அனு­மதி பெறத் தேவை­யில்லை. கட்­டுப்­பாடு தளர்வு அறி­விப்பை கடந்த வெள்­ளிக்­கி­ழமை (ஜூன் 10) சுகா­தார அமைச்சு வெளி­யிட்­டது.

இருப்­பி­னும், அதிக மக்கள் நடமாட்டமுள்ள லிட்­டில் இந்­தியா, சைனா­ட­வுன், கேலாங் சிராய் மற்­றும் ஜூரோங் ஈஸ்ட் ஆகிய பகு­தி ­க­ளுக்கு ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளி­லும் பொது விடு­முறை தினங்­க­ளி­லும் செல்ல அனு­மதி அட்­டைக்கு அவர்­கள் விண்­ணப்­பிக்க வேண்­டும்.

அதே­நே­ரம், வார நாட்­க­ளி­லும் சனிக்­கி­ழ­மை­க­ளி­லும் அவர்­கள் இந்­தப் பகு­தி­க­ளுக்கு அனு­மதி பெறா­மல் செல்­ல­லாம்.

ஒவ்­வொரு ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யும் பொது விடு­முறை தினங்­க­ளி­லும் 80,000 அனு­மதி அட்­டை­கள் வழங்­கப்­படும் என்று அமைச்சு கூறி­யது. அந்த வகை­யில், லிட்­டில் இந்­தியா செல்ல 30,000, ஜூரோங் ஈஸ்ட்­டுக்கு 20,000, சைனா­ட­வுன், கேலாங் சிராய் ஆகிய பகு­தி­க­ளுக்­குச் செல்ல தலா 15,000 அனு­மதி அட்­டை­கள் வழங்­கப்­படும்.

கொவிட்-19 கிருமி பர­வத் தொடங்­கி­ய­போது 2020 ஏப்­ரல் மாதம் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­யில் 31 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். அடுத்த இரு மாதங்­களில் அந்த எண்­ணிக்கை வேக­மாக உயர்ந்து 33,000க்குச் சென்­றது. கடந்த ஆண்டு இறு­தி­வரை கிட்­டத்­தட்ட 175,000 ஊழி­யர்­கள் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

கட்­டுப்­பாடு தளர்த்­தப்­படும் ஜூன் 24ஆம் தேதிக்­கா­கத் தங்­களில் பல­ரும் ஆவ­லு­டன் காத்­தி­ருப்­ப­தாக வெளி­நாட்டு ஊழி­யர்­கள் கூறி­னர்.

"செந்­தோ­சா­வை­யும் இத­ர தீவு­

க­ளை­யும் சுற்­றிப்­பார்க்க ஏற்­கெ­னவே திட்­ட­மிட்­டுள்­ளோம்," என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறி­னார் பங்­க­ளா­தே­ஷைச் சேர்ந்த மொஃ பாஸல் ஹொசைன், 36.