பயிற்சியை முடித்த 417 ராணுவ அதிகாரிகள் நேற்று முன்தினம் தங்களது பதவிப் பொறுப்புகளை ஏற்றனர். இதற்கான நிகழ்வு, ஜூ கூனில் உள்ள சாஃப்டி ராணுவ பயிற்சிக் கழகத்தில் நடைபெற்றது.
இந்தப் பதவி ஏற்பு நிகழ்வைஒட்டி முழு அளவிலான ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
கொவிட்-19 கொள்ளைநோய் பரவலுக்குப் பின்னர் முழு அணி
வகுப்பு நடைபெற்றிருப்பது இப்போதுதான். பதவி ஏற்கும் அதிகாரி ஒவ்வொருவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட நால்வரை அழைத்து வர அனுமதிக்கப்பட்டிருந்தது.
பதவி ஏற்றவர்களில் ஒருவரான இரண்டாம் லெஃப்டினென்ட் கே.அர்ஜுனன், 21, தமது லட்சியம் நிறைவேறியதாக மனநிறைவை வெளிப்படுத்தினார். இவர் பதின்ம வயதில் இருந்தபோது தமது அண்ணன் ராணுவ அதிகாரியாகப் பதவி ஏற்ற நிகழ்வில் பங்கேற்றார்.
அப்போது, ராணுவ அதிகாரிப் பயிற்சிப் பள்ளியில் சேரவேண்டும் என்ற லட்சியம் அர்ஜுனன் மனதில் வேரூன்றியது. அவரது அந்த விருப்பம் நிறைவேறும் வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிகாரிப் பயிற்சிப் பள்ளியில் அவருக்கு இடம் கிடைத்தது.
சனிக்கிழமை பதவி ஏற்கும் நிகழ்வின்போது பேசிய அர்ஜுனன், "என்னுடைய அண்ணன் பங்ககேற்ற அணிவகுப்பைப் பார்த்தேன்.
"இதைப் பார்த்த பின்னர் அவரிடம் பல மாற்றங்களைக் கண்டேன். ராணுவச் சேவை அவரை நல்லவித மாக மாற்றியது. அவரது சிந்தனையிலும் நடந்துகொள்ளும் விதத்திலும் முதிர்ச்சி இருந்ததைக் கவ னித்தேன்," என்றார்.
பதவி ஏற்பு நிகழ்வில் பங்கேற்ற கல்வி, வெளியுறவு இரண்டாம் அமைச்சர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான், "கொவிட்-19 மீட்சியை நோக்கி சிங்கப்பூர் உருமாற்றம் கண்டுவந்தாலும் உலகம், ரஷ்யா-உக்ரேன் பூசல் காரணமாக நிச்சயமற்ற நிலைமைகளை உருவாக்கி உள்ளது," என்றார்.
"இருப்பினும், புதிய சவால்
களைச் சந்திக்க சிங்கப்பூர் ஆயுதப் படை தொடர்ந்து எழுச்சிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நமது அரசுரிமை, அமைதி மற்றும் பாதுகாப்புக்கான ஒரே உத்தரவாதம் வலுவான, நம்பகமான சிங்கப்பூர் ஆயுதப் படைதான்," என்றும் டாக்டர் மாலிக்கி கூறினார்.

