சன்டெக் சிட்டி டவர் 2 கட்டடத்தின் 30வது மாடி முழுவதையும் சிங்கப்பூர் நிரந்தரவாசி ஒருவர் 38.8 மில்லியன் வெள்ளிக்கு வாங்கி உள்ளார்.
ஹட்டன்ஸ் சொத்துச் சந்தை நிறுவனம் இதை திங்கட்கிழமை (ஜூன் 13) அன்று தெரிவித்தது.
அந்த அலுவலக இடத்தின் பரப்பளவு 11,743.52 சதுர அடி ஆகும். அதாவது அந்த இடம், சதுர அடிக்கு 3,300 வெள்ளி எனும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
மொத்த விலை அடிப்படையிலும் சதுர மீட்டர் அடிப்படையிலும் சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஆக அதிகமான விலைக்கு விற்கப்பட்ட சொத்து இதுவாக இருக்கக்கூடும்.
அந்த இடத்தை வாங்கியவர் சீன வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரவாசி என்று இடைத்தரகு செய்த ஹட்டன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ஆரிக் லிம் கூறினார்.
சன்டெக் சிட்டி டவர் 2 கட்டடத்தின் 30வது மாடியிலிருந்து மரீனா பே மொத்தத்தையும் இடையூறு இன்றிபோர்க்க முடியும் என்பதால் அந்த இடத்தை அந்த நபர் வாங்கியதாக திரு லிம் கூறினார்.
அந்த இடத்தில் மூன்று அலுவலகங்கள் அமைந்துள்ளன.
அதில் ஒன்றை மட்டும் பயன்படுத்தி விட்டு மற்ற அலுவலகங்களைத் தொடர்ந்து வாடகைக்கு விட புதிய உரிமையாளர் எண்ணி இருக்கிறார்.

